TRB Key Answers - வினா - விடையில் குளறுபடி
அரசு பள்ளிகளில்,1,325 ஆசிரியர் பணியிடங்களுக்கு, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., நடத்திய போட்டி தேர்வில், தவறுதலாக வினா - விடை தயாரிக்கப்பட்டு உள்ளதாக புகார் எழுந்துள்ளது. தமிழக அரசு ப
ள்ளிகளில், ஓவியம், தையல், இசை, உடற்கல்வி என, பல்வேறு சிறப்பு பாடங்களுக்கு, நிரந்தரமாக, 1,325 ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கு, செப்., 23ல், போட்டி தேர்வு நடந்தது; 35ஆயிரத்து, 781 பேர் பங்கேற்றனர்.
இந்த தேர்வுக்கான, தற்காலிக விடைக்குறிப்பை, டி.ஆர்.பி., வெளியிட்டது. அதில், வினாவும், விடையும் தவறாக உள்ளதாக, முதல்வருக்கு புகார் அனுப்பப்பட்டு உள்ளது.
இதுகுறித்து, தமிழ்நாடு கலை ஆசிரியர் சங்க மாநில தலைவர், எஸ்.ஏ.ராஜ்குமார் அனுப்பிய புகார் வருமாறு: பத்தாம் வகுப்பைத் தேர்ச்சியாக கொண்ட, சிறப்பு ஆசிரியர் பணிக்கு, ஆங்கிலத்தில் மட்டுமே, பாடத்திட்டம் வெளியிடப்பட்டது. தமிழில் வெளியிட கோரியும், டி.ஆர்.பி., கண்டு கொள்ளவில்லை. இந்த தேர்வில், கவின் கலை கல்லுாரி பாடங்களுக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்து, வினாக்கள் இடம் பெற்றன. அதனால், ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள், அதிர்ச்சியில் உள்ளனர்.வினாத்தாளில், கிடைமட்டக்கோடு என்பதற்கு, தவறான பதில் குறிப்பு தரப்பட்டுள்ளது. 'அஜந்தாவில், புத்தரின் ஓவியம் தீட்டப்பட்ட குகை எண் என்ன...' என்ற கேள்வியில், சரியான பதில் குறிப்பு தரவில்லை. 'இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பைன் ஆர்ட்ஸ்' என்பதற்கு பதில், 'இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் பைன் ஆர்ட்ஸ்' அமைந்துள்ள இடம் என, தவறாக கேட்கப்பட்டுள்ளது.தந்த சிற்பக்கலை யாருடைய காலத்தில் சிறப்பு பெற்றது என்ற வினாவுக்கு, நாயக்க மன்னர்கள் காலம் என, பள்ளிக்கல்வி, பிளஸ் ௨ தமிழ் புத்தகத்தில் பதில் உள்ளது.
ஆனால், விஜயநகர மன்னர்கள் காலம் என, வரலாற்றையே மாற்றி, டி.ஆர்.பி., தெரிவித்துள்ளது. இப்படி பல்வேறு வினாக்களும், பதில் குறிப்புகளும் தவறுதலாக உள்ளதால், அவற்றுக்கு போனஸ் மதிப்பெண் வழங்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Comments
Post a Comment