பிளஸ் 2 துணைத்தேர்வு எழுதிய மாணவர்கள் நாளை முதல் விடைத்தாள் நகல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்


பிளஸ் 2 துணை தேர்வெழுதிய மாணவர்கள் நாளை முதல் இணையதளத்தில் விடைத்தாள் நகல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அரசு தேர்வுகள் இயக்குனர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அரசு தேர்வுகள் இயக்குனர் வசுந்தரா தேவி நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பு: 

கடந்த செப்டம்பர்-அக்டோபர் மாதம் நடைபெற்ற மேல்நிலைத் துணைத் தேர்வெழுதிவிடைத்தாட்களின் நகல் கோரி விண்ணப்பித்த தேர்வர்கள் 13ம் தேதி (நாளை) பிற்பகல் முதல் scan.tndge.in என்ற இணையதளத்திற்குச் சென்று தங்களது பதிவெண் மற்றும்பிறந்த தேதியினைப் பதிவு செய்து தாங்கள் விண்ணப்பித்த பாடங்களுக்குரியவிடைத்தாட்களின் நகலினைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விடைத்தாட்களின் நகலினை பதிவிறக்கம் செய்த பிறகு மறுகூட்டல் அல்லதுமறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்பினால், இதே இணையதள முகவரியில் Application For Retotalling/revaluation என்ற தலைப்பினை கிளிக் செய்து வெற்று விண்ணப்பத்தினைப் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். 
இவ்விண்ணப்பப் படிவத்தினை, பூர்த்தி செய்து இரு நகல்கள் எடுத்து வரும் 15ம் தேதி (புதன்கிழமை) காலை 10 மணி முதல் 17ம் தேதி (வெள்ளிக் கிழமை) மாலை 5 மணிக்குள் உரிய முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டிற்கான கட்டணத்தினை முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் பணமாகச் செலுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Comments

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

10th Std English One Mark Question Bank