ஆண்ட்ராய்டு தளத்திற்கான யூட்யூப்பில் 'டார்க் மோட்' அம்சம்.!
யூட்யூப்பில் டார்க் மோட் என்றவொரு மறைக்கப்பட்ட அம்சம் இருப்பது உங்களில் பலருக்கு தெரிந்திருக்கலாம்.
இரவு நேரங்களில் அதிக அளவிலான யூட்யூப் வீடியோ பார்க்கும் பயனர்களுக்கு மிகவும் குளிர்ச்சியான ஒரு அம்சமான டார்க் மோட் அம்சம் விரைவில் பொதுவான அம்சமாக மாறவுள்ளது. ஆம். யூட்யூப் பக்கத்தின் வெள்ளை மேற்பரப்புகள் இருண்ட ஒன்றாக மாற்றிவிடும் அடிப்படையிலான டார்க் மோட் அம்சமானது விரைவில் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு உருட்டப்படவுள்ளது. இருப்பினும், முன்பு கூறியது போல், இதுவொரு மறைந்த அம்சமாகும். யூட்யூப்பில் இந்த டார்க் பயன்முறையை செயல்படுத்த, நீங்கள் சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். இதை பற்றி விரிவாக இங்கே படிக்கலாம். இந்த அம்சம் முதலில் ரெட்டிட் பயனர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. ஆண்ட்ராய்ட் போலீசின் ஒரு தகவலின்படி, யூட்யூப் ஆனது இப்போது அதன் ஆண்ட்ராய்டு தளங்களில் டார்க் பயன்முறையை சேர்க்க திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த அம்சம் சரியாக எப்போது வரும் என்பது பற்றிய எந்தவிதமான தகவலும் கிடையாது. இந்த டார்க் மோட் அம்சம் மீது நீங்கள் ஆர்வமாக இருந்தால், யூட்யூப் டெவெலப்பர் அமைப்புகளின் சமீபத்திய பதிப்பிற்கு சென்று, இந்த முறைமையை இயக்கலாம். இந்த அம்சம் இன்னும் வளரும் நிலைகளில் இருப்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
இந்த படத்தில் நீங்கள் காணக்கூடியபடி, வீடியோக் குழுவின் கீழ் வைக்கப்பட்டுள்ள ஐகான்கள் கருப்பு நிறத்தில் இருக்கும். சுவாரஸ்யமாக, திரையினுள் உள்ள மற்ற டெக்ஸ்ட் மற்றும் ஜகான்ஸ்கள் வெண்மையான சாம்பல் வண்ணத்தில் இருப்பதால் அவைகளை தெளிவாக காணமுடிகிறது. அதாவது, இந்த அம்சத்தினை முழுமையாக உருட்டும் முன்னர் கூகுள் பல சோதனை முயற்சிகளை கையாள்கிறது என்று அர்த்தம். யூட்யூப்பின் டெஸ்க்டாப் பதிப்பில் உள்ள டார்க் மோட் போலல்லாமல், இந்த பயன்முறையானது ஆண்ட்ராய்டு பயன்பாட்டின் முழு இடைமுகமும் இருள்மிக்கதாக மாறாது. வீடியோ குழு மட்டும் இருளாகிவிடும். அதாவது, பிரதான வீடியோவுக்கு கீழேயுள்ள முதல் மூன்று பகுதிகளும் கருப்பாகி ஆகிவிடும் என்று கூறப்படுகிறது.
Comments
Post a Comment