எந்தெந்தப் பொருள்களுக்கு ஜி.எஸ்.டி குறைக்கப்பட்டுள்ளது! பட்டியல் இதோ
நேற்று நடந்த ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில், 200-க்கும் மேற்பட்ட பொருள்கள் மீதான வரி குறைக்கப்பட்டது. அந்தப் பொருள்களின் பட்டியலை இங்கே தருகிறோம்.
28 சதவிகிதத்தில் இருந்து 18 சதவிகிதமாகக் குறைக்கப்பட்ட பொருள்கள்:
1. மின் வயர்கள், கேபிள்கள், எலெக்ட்ரானிக் ப்ளக்குகள், ஸ்விட்ச்கள், ஃப்யூஸ் மற்றும் ரிலேக்கள்
2. எலெக்ட்ரிக்கல் போர்டுகள், பேனல்கள்
3. ஃபைபர் அட்டைகள், ப்ளைவுட், மரச்சட்டம்
4. மரச்சாமான்கள், மெத்தைகள், படுக்கைகள்
5.சூட்கேஸ், ப்ரீஃப்கேஸ், டிராவல் பேக், கைப்பைகள்
6. டிட்டர்ஜென்ட் பவுடர்கள், சுத்தம்செய்யப் பயன்படுத்தும் பவுடர்கள்
7. ஃபேஸ்வாஷ், ஹேண்ட் வாஷ்
8. ஷாம்பூ, ஹேர் டை, ஹேர் க்ரீம்
9. ஷேவிங் கிரீம்கள், ஆஃப்டர் ஷேவ் மெட்டீரியல்கள், நறுமணத் தைலம், பெர்ஃப்யூம்,
10. அழகு சாதனப் பொருள்கள்
11. மின் விசிறி, பம்ப்புகள், கம்ப்ரஸர்கள்
12. மின் விளக்குகள், விளக்குகளைப் பொருத்தும் சாதனங்கள்
13. ப்ரைமரி செல் மற்றும் பேட்டரிகள்
14. சுகாதாரத்துக்குப் பயன்படுத்தும் துணிகள்
15. ஃப்ளோர் கவரிங், ஷவர் சிங்க்ஸ், வாஷ் பேஸின், பிளாஸ்டிக் சேர்கள்
16. மார்பிள், கிரானைட், டைல்ஸ், செராமிக் டைல்ஸ்
17.ப்ளாக்ஸ், லைட்டர்கள்
18. கைக்கடிகாரம், கடிகாரம்
19. தோல் பைகள், சவுரி முடி
20. ஸ்டவ், குக்கர்,
21. ரேசர் மற்றும் ப்ளேடுகள்
22. பல்திறன்கொண்ட பிரின்டர்கள், அதற்கான அச்சு மை
23. கதவு, ஜன்னல்கள் மற்றும் அலுமினியச் சட்டங்கள்
24. சிமென்ட், கான்கிரீட், செங்கல், மைக்கா, பைப்புகள், பைப் ஃபிட்டிங் பொருள்கள்
25. வால் பேப்பர், வால் கவரிங்
26. கண்ணாடி மற்றும் அது சார்ந்த பொருள்கள்
27. மின்பளுதூக்கும் மேடை
28. லிஃப்ட்டுகள், புல்டோஸர், ரோடு ரோலர், எர்த் மூவர்ஸ்
29. எஸ்கலேட்டர்கள்
30. கூலிங் டவர், ரியாக்டர்
31. ரேடியோ மற்றும் தொலைக்காட்சி ஒளிபரப்புக்கான கருவிகள்
32. ஒலிப்பதிவுக் கருவிகள்
33. சிக்னல், டிராஃபிக் கன்ட்ரோல் கருவிகள்
34. உடற்பயிற்சிக் கருவிகள்
35. இசைக்கருவிகள்
36. செயற்கை பூ, பழம்
37. பட்டாசு
38. கோகோ வெண்ணெய், ஆயில் பவுடர்
39. காபி
40. சாக்லேட், சூயிங்கம்,
42. பதப்படுத்தப்பட்ட இறைச்சி, புரதம்
43. ரப்பர் டியூப்புகள்
44. பைனாகுலர், டெலஸ்கோப்
45. ஒளிப்பதிவு கேமரா, புரொஜெக்ட்டர்
45. மைக்ரோஸ்கோப், ஆய்வக உபகரணங்கள், வானிலை, பூகோளவியல் உள்பட்ட அறிவியல் சார்ந்த கருவிகள்
46. சால்வென்ட், ஹைட்ராலிக் ப்ளூயிட்ஸ்
28 சதவிகிதத்தில் இருந்து 12 சதவிகிதமாகக் குறைக்கப்பட்ட பொருள்கள்
1. வெட் கிரைண்டர்கள் மற்றும் கல் கிரைண்டர்கள்
2. டாங்கிகள், ராணுவ வாகனங்கள்
18 சதவிகிதத்தில் இருந்து 12 சதவிகிதமாகக் குறைக்கப்பட்ட பொருள்கள்
1. பால்
2. சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை, சர்க்கரைத் துண்டுகள்
3. பாஸ்தா
4. குழம்பு பேஸ்ட்
5. டயாபட்டீஸ் உணவு
6. மருத்துவத்துக்காகப் பயன்படுத்தப்படும் ஆக்ஸிஜன்
7. அச்சுக்கூடங்களில் பயன்படுத்தப்படும் மை
8. ஹேண்ட் பேக், காட்டன் ஷாப்பிங் பை, தோள் பை
9. தொப்பி
10. விவசாயம், அறுவடைக்குப் பயன்படுத்தப்படும் கருவிகள்
11. தையல் இயந்திர பாகங்கள்
12. கண்ணாடிச் சட்டங்கள்
13. முழுக்க முழுக்க மூங்கிலால் செய்யப்பட்ட மரச்சாமான்கள்
18 சதவிகிதத்தில் இருந்து 5 சதவிகிதமாகக் குறைக்கப்பட்ட பொருள்கள்
1. கடலை மிட்டாய் உள்ளிட்ட பொருள்கள்
2. பிராண்டு பெயர் இல்லாமல் தயாரிக்கப்படும் உருளைக்கிழங்கு சிப்ஸ்
3. சட்னிப் பொடி
12 சதவிகிதத்தில் இருந்து 5 சதவிகிதமாகக் குறைக்கப்பட்ட பொருள்கள்1. கொப்பரை தேங்காய்
2. இட்லி, தோசை மாவு
3. தோல் பொருள்கள்
4. கயிறு, சணல் கயிறு
5. மீன்பிடி வலை, மீன்பிடித் தூண்டில்
Comments
Post a Comment