TET : தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறாத பட்டதாரி ஆசிரியர்களுக்கு சலுகை


ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாததால், தகுதி காண் பருவம் முடிக்கப்படாமல் உள்ள ஆசிரியர்களுக்கு, புதி
ய சலுகை வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில், கட்டாய கல்வி சட்டம், 2010 அக்., 23ல் அமல்படுத்தப்பட்டது. இதில், ஆசிரியர் நியமனத்துக்கு, தகுதித் தேர்வு கட்டாயம் என வலியுறுத்தப்பட்டதால், 2011 நவ., 15ல், அதற்கான அரசாணை வெளியிடப்பட்டது.
அதே மாதம், பணி நியமனம் பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு, ஐந்தாண்டுகளுக்குள் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என, நிபந்தனை விதிக்கப்பட்டது. 


இதனால், அத்தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர் களுக்கு, பணி வரன்முறை ஆணை வழங்கப்பட்டிருப்பினும், தகுதி காண் பருவம் வழங்கப்படவில்லை.
ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தும் முன், பணி நியமனம் பெற்ற ஆசிரியர்களுக்கு, முழுமையாக தகுதித் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்தது.
இதனால், பணி நியமனம் பெற்றவர்களில், 2010 ஆக., 23க்கு முன், சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்றோர், தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற தேவையில்லை என, அறிவிக்கப்பட்டது.
புதிய சலுகையாக, 'பணி நியமனம் பெற்றவர்களில், அதற்கான விளம்பரம், 2010 ஆக., 23க்கு முன் வெளியாகிஇருந்தால், அவர்களும், தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற தேவையில்லை' என, அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்பிரிவில் வரும் ஆசிரியர்களின் தகுதிகாண் பருவத்தை முடித்து, ஆணை வழங்க, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால், பெரும்பாலான பட்டதாரி ஆசிரியர்கள், பணி நிரந்தரம் செய்வதில் நிலவி வந்த சிக்கல் தீர்ந்துள்ளது.

Comments

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)