TN 7th PAY COMMISSION - விருப்ப படிவம் (OPTION FORM) கொடுக்கும் போது கீழ்கண்ட தகவல்களை கவனத்தில் கொள்ளவும்


✍அனைவரும் 01.01.2016 ல் ஊதிய நிர்ணயம் செய்து கொள்ள விருப்பம் தெரிவிக்கலாம்.* ஏனெனில் 01.01.2016 முதல் 30.09.2017 முடிய பெற்ற
ஆண்டு ஊதிய உயர்வு, ஊக்க ஊதிய உயர்வு, தேர்வு/சிறப்பு நிலை ஆகிய தேதிகளில் ஏதேனும் ஒன்றில் 7th pay commission நிர்ணயம் செய்வதால் இன்றைய தேதியில் (01.10.2017) ஊதிய மாற்றம் ஏதும் ஏற்படவில்லை.

✍01.01.2016 முதல் 30.09.2017 முடிய இடைப்பட்ட காலத்தில் பதவி உயர்வு பெற்று இருந்தால், பதவு உயர்வு பெற்ற தேதியில் ஊதிய நிர்ணயம் செய்து கொள்ள விருப்பம் தெரிவிக்கலாம். *(இது பயனளிக்கும்)*

✍01.01.2016 க்கு முன் தேதியில் ஊக்க ஊதிய உயர்வு/தேர்வு நிலை/சிறப்பு நிலை/மூத்தோர் இளையோர் ஊதியம் நிர்ணயம் செய்து (if any), அதற்கான நிலுவையை 01.01.2016 க்கு பிறகு பெற்றவர்கள், விருப்ப படிவத்தில் 01.01.2016 அன்று ஊக்க ஊதிய உயர்வு/தேர்வு நிலை/சிறப்பு நிலை/ மூத்தோர் இளையோர் ஊதிய நிர்ணயம் (if any) செய்த தொகையை குறிப்பிடவும்.

✍ஜனவரி 1, ஆண்டு ஊதிய உயர்வு பெறுபவர்கள் 31.12.2015 அன்று பெற்ற தொகையை விருப்பப் படிவத்தில் குறிப்பிடவும்.

✍மேற்கண்ட Option தேதியில் இருந்து ஊதிய நிர்ணயம் செய்த பிறகு 01.10.2017 ல் பெறும் ஊதியமும், 01.10.2017 அன்று பெற்ற பழைய அடிப்படை மற்றும் தர ஊதியத்தை 2.57 ஆல் pay matrix ல் நிர்ணயம் செய்து பார்த்தால் பெறக்கூடிய ஊதியமும் சமமாக இருக்கும். ஒருவேளை அதிகமாக இருந்தால் option தேதியை 01.01.2016 முதல் 30.07.2017 முடிய, ஏதேனும் ஊதிய நிர்ணயம் செய்து இருந்தால் அத்தேதிக்கு மாற்றி கொடுக்கலாம். *(மாற்றம் இருந்தால்)*


✍01.01.2016 முதல் 30.09.2017 முடிய இடைப்பட்ட காலத்தில் பதவி உயர்வு/ஊக்க ஊதிய உயர்வு/தேர்வு/சிறப்ப நிலை மற்றும் மூத்தோர் இளையோர் ஊதியம் பெற்று இருந்தால் அதற்கான உத்திரவை option படிவத்துடன் இணைத்து அனுப்ப தயார் நிலையில் வைத்திருக்கவும்.

Comments

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)