4G வசதியுடன் லேப்டாப்!

Asus நிறுவனம், ஸ்மார்ட்போன் மற்றும் மடிக்கணினிகள் தயாரிப்பில் தனக்கென ஒரு தனி இடத்தை தக்கவைத்துக்கொண்டுள்ளது.


இதுவரை அதிக பேட்டரி வசதிகள்கொண்ட ஸ்மார்ட்போன்கள் மற்றும் மடிக்கணினிகளை உற்பத்தி செய்துவந்த இந்த நிறுவனம், முதன்முறையாக புதிய முயற்சியைக் கையாண்டுள்ளது.
அதன்படி நேற்று முன்தினம் (டிசம்பர் 6) Asus நிறுவனம் NovaGo என்ற புதிய மாடல் மடிக்கணினி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. முதன்முறையாக 4G நெட்வொர்க் வசதியுடன் செயல்படும் வகையில் இந்த மடிக்கணினி வெளியாகி உள்ளதால் பயனர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தும் ஸ்னேப்டிராகன் 835 ப்ராசெஸ்சர் பயன்படுத்தப்பட்டுள்ளது.
4GB RAM மற்றும் 64GB அல்லது 256GB இன்டெர்னல்கள் கொண்டு இரண்டு விதமான மாடல்கள் வெளியாகி உள்ளன. இதில் சிம் பயன்படுத்துவதற்காகத் தனியே வசதி இணைக்கப்பட்டுள்ளது. எனவே வைஃபை இல்லாத நேரங்களிலும் இதில் இன்டர்நெட் வசதியை பெற்றுக்கொள்ள முடியும். இந்தப் புதிய மடிக்கணினியானது முக்கியமாக 4G நெட்வொர்க் வசதியின் இன்டர்நெட் சேவையைப் பயன்படுத்துவதற்காக வெளியிடப்பட்டுள்ளது என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
மிகவும் மெல்லியதாகவும், எடைக்குறைந்த ஒன்றாகவும் இந்த மடிக்கணினி உள்ளதால் இதை எளிதில் எங்கும் எடுத்து செல்ல இயலும். இதன் பேட்டரி சக்தியைக்கொண்டு சுமார் 22 மணி நேரம் வரை பயன்படுத்திக் கொள்ளலாம் எனக் கூறியுள்ளனர். இதன் விற்பனையை விரைவில் தொடங்கவும் Asus நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

Class 6th English Learning Outcomes Chapter-1

6,7,8,9,10 Std English Notes of Lesson Collection 2022