நில அளவை வகைகள் ஓர் பார்வை!!!
டிராவர்ஸ் சர்வே (Traverse Survey or Theodolite Method)
எளிய முக்கோண நில அளவை முறை(Simple Triangletion Method)
புங்கனூர் நில அளவை முறை (Punganoor Method or Ray System)
மூலைவிட்டம் மற்றும் செங்குத்தளவு முறை(Diagonal&Offset System)
*டிராவர்ஸ் சர்வே*
டிராவர்ஸ் சர்வே என்பது மிகப் பெரிய பரப்பளவு உள்ள,கிராமம்,வட்டம்,மாவட்டம் போன்றவற்றின் பரப்பைக் கணக்கிடும் போது பரப்புப் பிழைகள் அனுமதிக்கப்பட்ட அளவுக்குள் வராமல் பரப்புப் பிழை ஏற்படும் நேர்வுகளில்,பரப்புப்பிழை எங்கே ஏற்பட்டுள்ளது என்பதை கண்டறிய, சிறுச் சுற்றுப் (Minor Circuit) பகுதிகளாக அதாவது கண்டங்களாக பிரித்து கோண அளவைக் கருவி (Theodolite) கொண்டு, அளவை செய்து (Gale's Traverse Table) நீண்ட சதுர கணித முறைப்படி துள்ளியமாக பரப்பு கணித்து அனுமதிக்கப்பட்ட பரப்புப் பிழைகளுக்கு உட்பட்டு பரப்பு நிர்ணயம் செய்யப்படும். தமிழகத்தில் சங்கிலி (chain) மற்றும் நேர் கோணக்கட்டை(cross staff)கொண்டு அளவைப் பணி முடித்திருப்பதால்,ஒவ்வொரு நில அளவைப் புலங்களுக்கும் நிர்ணயிக்கப்பட்ட பரப்புகளின் கூட்டு மதிப்பும்,சிறுச் சுற்றுப் (Minor Circuit) பகுதிகளாக பிரித்து நிர்ணயிக்கப்பட்ட பரப்புகளின் கூட்டு மதிப்பும், அனுமதிக்கப்பட்ட பரப்புப் பிழைக்கு உட்பட்டுள்ளதா? என பரிசோதித்து ஏற்படும் அதிகப்படியான பரப்புப் பிழை எந்தப் பகுதி அதாவது கண்டத்தில் என இலகுவாக கண்டுபிடிக்க [9] ஏதுவாக முறையில் அளவை செய்யப்படும் முறையே டிராவர்ஸ் சர்வே எனப்படும்.
*எளிய முக்கோண அளவை முறை*
நில உடமையாளர்களின் அனுபவ எல்லைகளை அனுசரித்து, ஒவ்வொரு எல்லை வளைவுகளையும் ஒவ்வொரு முக்கோணமாக அமைத்து நில அளவைப் புலங்களாக(Survey Fields) அளவை செய்யப்படும் முறை எளிய முக்கோண அளவை முறை ஆகும்.(Simple Triangletion Method),[10]இதில் ஒவ்வொரு வளைவுகளுக்கும் கற்கள் நடப்பட்டதால் பொருட்செலவு அதிகமாகவும்,வரைபடங்கள் தயாரிக்க நீண்டகாலமும் ஏற்பட்டது,துள்ளியமாக கணக்கீடும் செய்ய இயலவில்லை.
*புங்கனூர் அளவை முறை*
நில உடமையாளர்களின் அனுபவ எல்லைகளை அனுசரித்து, ஒவ்வொரு எல்லை வளைவுகளுக்கும் கற்கள் நடப்பட்டு உட்பிரிவுகளாக(Subdivisions) அமைத்து நில அளவைப் புலத்தின் ஏதாவது இரு முணைகளில் கற்கள் நடப்பட்டு இரு கற்களுக்கு இடைப்பட்ட கற்பனைக் கோட்டில் ஒவ்வொரு வளைவுகளுக்கும்(cross staff) மூலம் செங்குத்தளவு அளவை செய்யப்படும் முறை புங்கனூர்(Punganoor Method or Ray System) அளவை முறை ஆகும்.[11]இதில் ஒவ்வொரு வளைவுகளுக்கும் கற்கள் நடப்பட்டதால் பொருட்செலவு அதிகமாகவும்,வரைபடங்கள் தயாரிக்க நீண்டகாலமும் ஏற்பட்டது,துள்ளியமாக கணக்கீடும் செய்ய இயலவில்லை.
*மூலைவிட்டம் மற்றும் செங்குத்தளவு முறை*
நில உடமையாளர்களின் அனுபவ எல்லைகளை அனுசரித்து, ஒவ்வொரு உட்பிரிவுகளாக(Subdivisions) அமைத்தும்,நஞ்சையில் ஐந்திலிருந்து பத்து ஏக்கருக்கு மிகாமலும்,புஞ்சையில் பத்து ஏக்கரிலிருந்து இருபது ஏக்கர் வரையிலும் அமைத்து, ஒவ்வொரு நில அளவைப் புலங்களுக்கும் புல முச்சந்திகளுக்கு மட்டும் கற்கள் நடப்பட்டு நிலங்களின் வளைவுகளுக்கும் செங்குத்தளவு அளவை செய்து அளவை செய்யப்படும் முறைதான் மூலை விட்டம் மற்றும் செங்குத்தளவு முறையாகும். (ஆங்கிலம்Diagonal&Offset System)
Comments
Post a Comment