கிஸான் விகாஷ், செல்வமகள் சேமிப்பு திட்டத்திற்கு வட்டி விகிதம் குறைப்பு


சென்னை: தேசிய சிறு சேமிப்பு திட்டம், பொது வைப்பு நிதி ஆகியவற்றுக்கான வட்டி, 0.2 சதவீதம் குறைக்கப்பட்டு, 7.6 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.



பெண் குழந்தைகளுக்கான செல்வ மகள் திட்டத்தின் வட்டி, 8.3 சதவிகிதத்தில் இருந்து 8.1 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது.



கடந்த, 2016 ஏப்ரல் முதல் காலாண்டுக்கு ஒருமுறை சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் மாற்றியமைக்கப்பட்டு வருகிறது.

ஜனவரி - மார்ச் வரையிலான காலாண்டுக்கான வட்டி விகிதங்களை மாற்றி மத்திய நிதி அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அடிப்படை வட்டி விகிதம்
சேமிப்பு திட்டம் .
அதன்படி பல்வேறு சேமிப்பு திட்டங்களுக்கான அடிப்படை வட்டி விகிதத்தை 20 காசுகள் குறைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் சேமிப்பு திட்டங்களுக்கான அடிப்படை வட்டி விகிதம் 4 சதவிகிதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.



கிஸான் விகாஸ் பத்திரம்
வட்டி விகிதம் மாற்றம்
தேசிய சேமிப்பு பத்திரம், பொது வருங்கால வைப்பு நிதி உள்ளிட்டவற்றிக்கான ஆண்டு வட்டி விகிதம் 7.6 சதவிகிதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதுபோலவே கிஸான் விகாஸ் பத்திரத்திற்கான 11 மாத வட்டி 7.3 சதவிகிதம் என அறிவிக்கப்பட்டுள்ளது.



செல்வமகள் சேமிப்பு
பெண் குழந்தைகள் சேமிப்பு
இதுபோலவே, பெண் குழந்தைகளின் கல்வி, திருமணம் உள்ளிட்ட எதிர்கால செலவுகளுக்காக பெற்றோரால் சேமித்து வைக்கப்படும் சுகன்ய சம்ருத்தி எனப்படும் செல்வமகள் சேமிப்பு திட்டத்திற்கும் வட்டியும், 8.3 சதவிகிதத்தில் இருந்து 8.1 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது.


மூத்த குடிமக்கள்
பிக்சட் டெபாசிட்
மூத்த குடிமக்களுக்கான சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் 8.3 சதவிகிதமாக தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கியில் ஒராண்டு முதல் 5 ஆண்டுகள் வரையிலான பிக்ஸட் டெபாசிட் எனப்படும் வைப்புத் தொகைக்கு 6.6 - 7.4 சதவீத ஆண்டு வட்டி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் 5 ஆண்டுகள் மற்றும் அதற்கு மேற்பட்ட வைப்புத் தொகைக்கு 6.9 சதவீதமாக ஆண்டு வட்டி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

10th Std English One Mark Question Bank