போலீஸ் வேலைக்கு ஆட்கள் தேர்வு


தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வுக்குழுமம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம், காவல் துறையில் ஆயுதப்படையில் காலியாக உள்ள 5,538 இரண்டாம் நிலைக் காவலர்கள் (ஆண், பெண் மற்றும் மூன்றாம் பாலினம்). சிறைத்துறையில் காலியாக உள்ள 340 இரண்டாம் நிலை
சிறைக்காவலர்கள் (ஆண் மற்றும் பெண்) மற்றும் தீயணைப்பு, மீட்புப் பணிகள் துறையில் காலியா உள்ள 216 தீயணைப்போர் (ஆண்) மற்றும் 46 பின்னடைவு காலிப்பணியிடங்களும் சேர்த்து மொத்தமாக 6,140 காலிப்பணியிடங்களை நிரப்பிடுவதற்கான விளம்பரம் 28–12–2017 அன்று வெளியிட்டுள்ளது.
இத்தேர்வில் முதன் முறையாக இக்குழும இணையதளம் வாயிலாக விண்ணப்பம் சமர்ப்பிக்கும் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. விண்ணப்பதாரர்கள் இக்குழுமத்தின் இணையதளம் www.tnusrbonline.org வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் 27–1–2018. இக்குழுமத்தில் ஒரு உதவிமையம் காலை 9.00 மணி முதல் இரவு 6.00 மணி வரை செயல்படும். விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கு ஏதேனும் உதவி தேவையெனில் விண்ணப்பதாரர்கள் உதவிக்கு தொலைபேசி எண்கள் 044 – 40016200, 044 – 28413658, 9499008445, 9176243899 மற்றும் 9789035725 –ல் தொடர்பு கொள்ளலாம்.
இதேபோன்ற உதவிமையம் மாநகரத்திலுள்ள காவல் ஆணையாளர் அலுவலகங்களிலும் மற்றும் மாவட்டங்களிலுள்ள காவல் கண்காணிப்பாளர் அலுவலகங்களிலும் செயல்பட்டு கொண்டிருக்கும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)