இரண்டே நாட்களில் பான் கார்டு பெறுவது எப்படி???


பான் கார்டு வைத்திருப்பது நல்லது.


நிரந்தர கணக்கு எண் அல்லது பான் கார்டு என்பது வரிசெலுத்துவோருக்கு வருமான வரி துறையினர் அளிக்கும் 10இலக்க எண்ணெழுத்தாகும். பான் கார்டினை அடையாளஅட்டையாகவும் பயன்படுத்தலாம்.

முன்பு எல்லாம் பான் கார்டுக்கு விண்ணப்பித்தால் ஒரு கார்டினைபெற 15-20 நாட்கள் தேவை. ஆனால் இப்போது இரண்டேநாட்களில் பான் கார்டு பெறவழிவகை செய்யப்பட்டுள்ளது. அதுஎப்படி என்று இங்குப் பார்ப்போம்.
1.என்எஸ்டிஎல் https://tin.tin.nsdl.com/ இணையதளத்தில் உள்நுழைக.

என்எஸ்டிஎல் இணையதளத்தில் உள்நுழைந்த பிறகுஉங்களுக்கான படிவத்தை தேர்வு செய்ய வேண்டும். பின்னர்இணையம் அல்லது ஆஃப்லைன் வழியாக விண்ணப்பிக்கவேண்டுமா என்பதைத் தேர்வு செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
இணையம் மூலமாக பான் கார்டுக்கு விண்ணப்பிக்கும் போதுதேவையான ஆவணங்களை ஸ்கேன் செய்து வைத்துக்கொள்ளவேண்டியது அவசியம்.
2. எந்த படிவம் என்பதைத் தேர்வு செய்யவும்
வழிகாட்டுதல்களை வாசித்த பிறகு என்ன படிவம் என்பதைத்தேர்வு செய்ய வேண்டும் பின்னர் தேவையான விவரங்களைப்படிவத்தில் உள்ளிடவும்.
3. விண்ணப்பத்தை எப்படிச் சமர்ப்பிப்பது?
படிவத்தை முழுவதுமாக நிரப்பிய பிறகு, தேவையானஆவணங்களைப் பதிவேற்றவும். ஆப்லைன் மூலம்விண்ணப்பிக்க விரும்புபவர்களும் பதிவிறக்கிய படிவத்தைஅச்சிட்டு அதில் விவரங்களை நிரப்ப வேண்டும். பின்னர்தேவையான விவரங்களை இணைக்க வேண்டும்.
4. விண்ணப்பத்தின் நிலை கண்டறிக
விண்ணப்பத்தைப் பதிவேற்றிய பிறகு உங்களுக்கு ஒப்புகை எண்ஒன்று கிடைக்கும், அதைவைத்துக்கொண்டு https://tin.tin.nsdl.com/pantan/StatusTrack.html என்ற இணைப்பிற்குச் சென்று உங்கள்விண்ணப்பம் என்ன நிலையில் உள்ளது என்றுசரிபார்த்துக்கொள்ளலாம். இப்படிச் செய்யும் போது உங்களுக்குஎப்போதும் போல பான் கார்டினை பெற 15 முதல் 20 நாட்கள் வரைஆகும். எனவே இங்குத் தெரிவினை பார்த்துத் தேர்வு செய்யவேண்டும்.
5. 48 மணி நேரத்தில் பான் கார்டு
படிவத்தினை சமர்ப்பித்த பிறகு நீங்கள் சரிபார்ப்பு முறை படிகளைசெய்ய வேண்டும். உங்களுக்கு வரி செலுத்தும் அளவிற்குவருமானம் இல்லை என்றாலும் பான் கார்டு வைத்திருப்பதுநல்லது.

Comments

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

10th Std English One Mark Question Bank