High School HM Case Judgement - இந்த வழக்கில்தான் கீழ்க்கண்ட அம்சங்கள் இடம் பெற்றிருந்தன


பதவி உயர்வு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழாசிரியர் கழகம்

அரசு அங்கீகார எண்: 125/2001

பதிவு எண்:100/92
 மாநில சிறப்புத் தலைவர் : நல்லாசிரியர் திரு. ஆ.வ.அண்ணாமலை அவர்கள்

செய்தி: ப.நடராசன்,
மாநில தலைமை நிலையச் செயலாளர், தருமபுரி.

உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் வழக்கின் இரண்டு ஆணைகள்:

முதன்மையான வழக்கு அதாவது main petition எண்:
 12656/2016

இந்த வழக்கில்தான் கீழ்க்கண்ட அம்சங்கள் இடம் பெற்றிருந்தன.

உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கான தடையாணை நீக்கப்படவில்லை.

 பதவி உயர்வு கலந்தாய்வினை  நடத்த அனுமதி குறித்து அந்த ஆணையில் எதுவும் குறிப்பிடப் படவில்லை.

முதுகலை ஆசிரியர்களாகப் பதவி உயர்வு பெற்றுச் சென்றவர்களைப் பட்டியலில் சேர்க்க வேண்டும் என எங்கேயும் குறிப்பிடப்படவில்லை.
சேர்க்கக் கூடாது எனவும் இல்லை.

மொத்தத்தில் உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் வழக்கினை இருவருக்கு மேற்பட்ட அதாவது குறைந்தது மூன்று பேர் உள்ள அமர்வு பெஞ்சுக்கு மாற்றிக் கொள்ளுங்கள் எனத் தெளிவாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 _தடையாணை வழக்கு அதாவது miscellaneous petition எண்:_ 
 *9577/2016*
இவ்வழக்கானது தடையாணை நீக்கக் கோருவது தொடர்பானதாகும்.

இவ்வழக்கு தொடர்புடைய ஆணையில்தான் இடைக்கால தடை நீக்கப்பட்டுள்ளதாகவும், 630 இடங்கள் பட்டதாரி ஆசிரியர்களுக்கெனவும், 250 இடங்கள் பட்டதாரி ஆசிரியர் பணியிலிருந்து பணி மாறுதல் மூலம் முதுகலை ஆசிரியர்களாகப் பதவி உயர்வில் சென்றுள்ளவர்களுக்கு எனவும் ஆணையிடப்பட்டுள்ளது.மேலும், பதவி உயர்வு பெற்ற முதுகலையாசிரியர்களுக்கு உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வினைக் கோரும் தார்மீக உரிமை கிடையாது எனவும், சில சூழ்நிலைகளின் அடிப்படையிலேயே அவர்களுக்கு இவ்வாய்ப்பினை வழங்கியுள்ளதாகவும், அதே சமயம் இவ்வழக்கின் இறுதித் தீர்ப்பின் நிலைப்பாட்டுக்குக் கட்டுப்பட்டும்  மட்டுமே அவர்களுக்குப் பதவி உயர்வு வழங்கப்படும் எனவும் அவ்வாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்னும் ஏராளமான நீதிமன்றம் சார்ந்த படி நிலைகள் உள்ளன. அவற்றினைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Comments

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)