மருத்துவ பட்ட மேற்படிப்புக்கு ஜன.7-ல் ‘நீட்’ தேர்வு


மருத்துவப் பட்ட மேற்படிப்புகளுக்கு ஜனவரி 7-ம் தேதி நீட் தேர்வு நடத்தப்படுகிறது. நாடு முழுவதும் 1 லட்சத்துக்கும் மேற்ப
ட்ட டாக்டர்கள் இத்தேர்வை எழுதுகின்றனர்
நாடு முழுவதும் அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் எம்டி, எம்எஸ் பட்டமேற்படிப்பிலும் பட்டய மேற்படிப்பிலும் (டிப்ளமோ) 23 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கு 2018-19-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கை தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்) மூலம் நடத்தப்படுகிறது.
ஒரு லட்சம் பேர் விண்ணப்பம்
தேசிய தேர்வுகள் வாரியம் நடத்தும் நீட் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது கடந்த அக்டோபர் 31-ம் தேதி தொடங்கி நவம்பர் 27-ம் தேதி முடிவடைந்தது. தமிழகத்தில் அரசு, தனியார் டாக்டர்கள் சுமார் 20 ஆயிரம் பேர் உட்பட நாடு முழுவதும் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். நீட் தேர்வு ஆன் லைன் மூலம் வரும் ஜனவரி 7-ம் தேதி நடத்தப்படுகிறது.
தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, நெல்லை, சேலம், திருச்சி உட்பட நாடு முழுவதும் 129 நகரங்களில் இத்தேர்வு நடக்கிறது. தேர்வு முடிவு ஜனவரி 31-ம் தேதி வெளியிடப் படுகிறது

Comments

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)