யுபிஎஸ்சி முதன்மைத் தேர்வு முடிவு வெளியீடு: தமிழகத்திலிருந்து 810 பேர் தகுதி
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) சார்பில் நடத்தப்பட்ட இந்திய குடிமைப் பணிகளுக்கான முதன்மைத் தேர்வு முடிவுகள் புதன்கிழமை வெளியிடப்பட்டது. இதில் தமி
ழகத்திலிருந்து 810 பேர் தகுதி பெற்றுள்ளனர்.
இந்தத் தேர்வு முடிவுகளை www.upsc.gov.in என்ற இணையதளத்தில் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.
ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட இந்திய குடிமைப் பணிக்கான தேர்வு, யுபிஎஸ்சி சார்பில் நடத்தப்படுகிறது. முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு இறுதியாக நேரடி ஆளுமை திறனாய்வு என்ற மூன்று நிலைகளில் இந்தத் தேர்வு நடத்தப்படும்.
கடந்த ஆண்டு ஜூன் 18-ஆம் தேதி நடத்தப்பட்ட முதல்நிலைத் தேர்வை 6 லட்சம் பேர் எழுதினர். இவர்களில் 13 ஆயிரத்து 365 பேர் முதன்மைத் தேர்வுக்குத் தகுதி பெற்றனர். இந்த முதன்மைத் தேர்வானது நாடு முழுவதும் கடந்த ஆண்டு அக்டோபர் 28-ஆம் தேதி முதல் நவம்பர் 3-ஆம் தேதி வரை நடத்தப்பட்டது.
இந்தத் தேர்வு முடிவு புதன்கிழமை வெளியிடப்பட்டது. இதில், தமிழகத்தைச் சேர்ந்த 810 பேர் உள்பட நாடு முழுவதும் 2 ஆயிரத்து 568 பேர் இறுதிகட்டமான நேரடி ஆளுமை திறனாய்வுக்கு தகுதி பெற்றுள்ளனர்.
இந்த ஆளுமை திறனாய்வானது புதுதில்லியில் உள்ள யுபிஎஸ்சி அலுவலகத்தில் அடுத்த மாதம் 19-ஆம் தேதி தொடங்க
உள்ளது.
இதற்குத் தகுதி பெற்றவர்கள் www.upsc.gov.in என்ற இணையதளத்திலிருந்து தங்களுக்கான அழைப்புக் கடிதத்தை வரும் 18-ஆம் தேதி முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். அவ்வாறு பதிவிறக்கம் செய்ய இயலாதவர்கள் கடிதம் மூலமாகவோ அல்லது 011 - 2338 5271, 2338 1125, 2309 8543 ஆகிய தொலைபேசி எண்கள் மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம் என யுபிஎஸ்சி தெரிவித்துள்ளது.
Comments
Post a Comment