ஸ்மார்ட்போன் பேட்டரி கொண்ட மொபைல் அறிமுகம்!

doogee என்ற நிறுவனம் 12000 mAH பேட்டரி வசதி கொண்ட ஸ்மார்ட்போன் ஒன்றினை அறிமுகம் செய்துள்ளது.



bl12000 என்ற புதிய மாடலை doogee நிறுவனம் அறிமுகம் செய்து அதன் பயன்பாடு குறித்த வீடியோ பதிவினை வெளியிட்டுள்ளது. இந்த புதிய மாடல் விரைவில் வெளியாகும் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது RAM மற்றும் இன்டெர்னல் வசதிகள் கொண்ட மாடல்களை பல்வேறு நிறுவனங்கள் வெளியிட்டு வரும் நிலையில், doogee நிறுவனம் பேட்டரி வசதி அதிகம் கொண்ட புதிய மாடலை அறிமுகம் செய்துள்ளது, பயனர்கள் கவனத்தை ஈர்த்துள்ளது.



4GB RAM மற்றும் 32GB இன்டெர்னல் வசதியுடன் இந்த மாடல் வடிவமைக்கப்பட்டுள்ளது. பின்புறம் 16 MP டூயல் கேரமாவும், 13MP செல்பி டூயல் கேமராவும் வழங்கப்பட்டுள்ளது. இதில் பிற வசதிகள் ஆவரேஜ் ஆக இருக்கும் போதும் 12000 mAH பேட்டரி வசதி இதுவரை பிற நிறுவனங்கள் வழங்காத ஒன்றாக இருப்பதால் இதன் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த புதிய மாடலின் விலை ரூ.12000 இருக்கும் என அந்நிறுவனத்தின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)