பொதுத்தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டில் தவறுகள் நிகழாத வண்ணம் சிபிஎஸ்இ புதிய நடவடிக்கை

10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டில் தவறுகள் நிகழாத வண்ணம் சிபிஎஸ்இ புதிய நடவடிக்கை: திருத்தும் பணியில் அனுபவமிக்க ஆசிரியர்கள்

சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டில் சிறுதவறு கூட ஏற்படாத வண்ணம் இருக்க புதிய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
அதன்படி,
விடைத்தாள் திருத்தும் பணியில் பயிற்சியும், அனுபவமும்மிக்க ஆசிரியர்களை மட்டுமே பயன்படுத்த சிபிஎஸ்இ முடிவுசெய்துள்ளது.
சிபிஎஸ்இ எனப்படும் மத்திய இடைநிலைக்கல்வி வாரியம் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை உரிய நேரத்தில் வெளியிடுவதில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக நிலவுகிறது. இதுவரை 10-ம் வகுப்பு தேர்வை மாணவர்கள் விரும்பி னால் பொதுத்தேர்வாகவும் இல்லாவிட்டால் பள்ளி அளவிலான தேர்வாகவும் எழுதிக்கொள்ளலாம். அடுத்த ஆண்டு முதல் முன்பு இருந்து வந்ததைப் போன்று 10-ம் வகுப்பும் தேர்வு பொதுத்தேர்வாக மட்டுமே நடத்தப்பட இருக்கிறது.இந்த நிலையில், 2018-ம் ஆண்டு 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை எவ்வித புகாருக்கும் இடம் அளிக்காமல் நடத்தி, உரிய நேரத்தில் தேர்வு முடிவுகளை வெளியிட சிபிஎஸ்இ முடிவுசெய்துள்ளது.
அதன் ஒரு பகுதியாக விடைத்தாள் மதிப்பீட்டில் அதிக கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளது. வழக்கமாக பொதுத்தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டு பணிக்கு தேவையான ஆசிரியர்களை அனுப்புமாறு பள்ளி நிர்வாகங்களை சிபிஎஸ்இ கேட்டுக்கொள்ளும்.ஆனால், இந்த விஷயத்தில் பள்ளிகள் மெத்தனமாக இருப்பதாகவும், பயிற்சியும் அனுபவ மும் வாய்ந்த ஆசிரியர்களை அனுப்புவதில்லை என்றும் சிபிஎஸ்இ கண்டறிந்தது. இதன் காரணமாக, விடைத்தாள் மதிப்பீட்டு பணியில் காலதாமதம் ஏற்பட்டு அதன்விளைவாக உரிய நேரத்தில் தேர்வு முடிவுகளை வெளியிட முடியாத சூழல் ஏற்படுவதும் கண்டுபிடிக்கப்பட்டது.எனவே, 2018-ம் பொதுத்தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளைப் பயிற்சியும், அனுபவமும் வாய்ந்த ஆசிரியர்களைக் கொண்டு மட்டுமே நிறைவேற்ற சிபிஎஸ்இ முடிவுசெய்துள்ளது.
இதற்காக, பயிற்சியும் அனுபவமும் மிக்க ஆசிரியர்களின் விவரங்கள் அடங்கிய தகவல் தொகுப்பைத் தயாரித்து அனுப்புமாறு அனைத்து பள்ளிகளுக்கும் சிபிஎஸ்இ செயலாளர் அனுராக் திரிபாதி உத்தரவு பிறப்பித்துள்ளார். இவ்வாறு பெறப்படும் தகவல் தொகுப்பில் இருந்து தகுதியான ஆசிரியர்களைத் தேர்வுசெய்து அவர்களை மட்டும் விடைத்தாள் மதிப்பீட்டு பணியில் ஈடுபடுத்த சிபிஎஸ்இ முடிவு செய்துள்ளது.
தேர்வு செய்யப்படும் ஆசிரியர்கள் விடைத்தாள் மதிப்பீட்டு பணியில் முழு கவனத்துடன் ஈடுபடும் வகையில் அவர்களுக்கு விடைத்தாள் மதிப்பீட்டு நாட்களில் வேறு எந்தவிதமான கற்பித்தல் பணிகளையும் அளிக்கக்கூடாது என்றும் சிபிஎஸ்இ பள்ளி நிர்வாகங்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளன.

Comments

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)