ஆசிரியர் பணிப்பதிவேடு வாரிசு புதுப்பிப்பு அவசியம்
‘ஆசிரியர்களின் பணிப்பதிவேடுகளில் வாரிசு தொடர்பான முழு விவரங்களை ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை தவறாமல் புதுப்பிக்க வேண்டும்,‘ என மாநில கணக்காயர் அலுவலக முதுநிலை கணக்கு
அதிகாரி பாலசந்தர் வலியுறுத்தினார்.
மதுரையில் தொடக்க கல்வித்துறை மற்றும் மாநில கணக்காயர் அலுவலகம் சார்பில் ஆசிரியர்களின் வருங்கால வைப்பு நிதி (பி.எப்.,) கணக்கீடு, சம்பள பில் தயாரிப்பில் ஏற்படும் சந்தேகங்கள், தவறுகளுக்கு தீர்வு காணும் கருத்தரங்கு நடந்தது.
இதில் பாலசந்தர் பேசியதாவது:
மாறுதலால் பல பள்ளிகளில் பணியாற்றும்போது ஒரு ஆசிரியருக்கு இரண்டு பி.எப்., கணக்குகள் உருவாகின்றன. இதை ஒரே கணக்காக மாற்ற வேண்டும். பி.எப்., சம்பள பில் தயாரிப்பில் ஏற்படும் சிறு தவறு எதிர்காலத்தில் உரிய பணப் பயனை பெறமுடியாத அளவிற்கு பிரச்னை ஏற்படும்.
எனவே சம்பள பில் தயாரிப்பு மற்றும் பிடித்தம் செய்யப்படும் போது உரிய இனங்களுக்கு உரிய கணக்குகள் தலைப்பை குறிப்பிட வேண்டும். ஆசிரியர்கள் பணிப்பதிவேடுகளில் குறிப்பிடப்பட்ட வாரிசுகள் விவரத்தை ஐந்து ஆண்டுகளுக்கும் ஒரு முறை புதுப்பித்து, இரண்டு சாட்சி கையொப்பம் பெறுவது அவசியம். பலர் இதை புதுப்பிப்பதில்லை.
Comments
Post a Comment