ஜனவரி 31ல் ஊதாநிற முழு பெருநிலவுடன் கிரகணம் ஏற்படும்
ஜனவரி 31ஆம் தேதி சூப்பர் ப்ளூ மூன் எனப்படும் ஊதா நிற முழு பெருநிலவு வரும்போது, கிரகணம் ஏற்படும் என விண்வெளி ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் சந்திரன் பூமிக்கு அருகில் வருவதால், அப்போது தோன்றும் பவுர்ணமி, முழு பெருநிலவாக காட்சியளிக்கும். அதன்படி, இந்த ஆண்டின் தொடக்க நாளான ஜனவரி ஒன்றாம் தேதி சூப்பர் மூன் எனப்படும் முழு பெருநிலவு காட்சியளித்தது. இதனை உலகின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் பார்த்து ரசித்தனர்.
இந்நிலையில், வரும் ஜனவரி 31ஆம் தேதி ஊதா நிற முழு பெருநிலவு தோன்றும் என்றும், அப்போது கிரகணமும் ஏற்பட இருப்பதாக கூறியுள்ள ஆராய்ச்சியாளர்கள், இந்த அறிய நிகழ்வு 150 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறவுள்ளதாக தெரிவித்துள்ளனர். சூப்பர் ப்ளூ மூனை அமெரிக்கா, ஐரோப்பா, ரஷ்யா, ஆசியா, இந்தியப் பெருங்கடல் பகுதியில் உள்ள நாடுகள், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் பார்க்கலாம் என விண்வெளி ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Comments
Post a Comment