தேர்வு மையத்தை எதிர் கொள்வது எப்படி??

தேர்வுக்கு முதல் நாள், நன்றாக தூங்குங்கள்!!!
இரவு 10 மணிக்கே படுத்து உறங்குகள்!!! மிதமாக/எளிதாக செரிக்க தக்க உணவுகளை எடுத்து கொள்ளுங்கள்!!!

தேர்வு நாளன்றும், மிதமாக/ எளிதான உணவுகளை எடுத்து கொள்ளுங்கள்!!! காலி வயிற்றுடன் செல்லாதீர்கள்!!! சிந்தனை திறனை மட்டுபடுத்தும்!!!
மெத்த படித்தவர்களாக இருந்தால் கூட…. முதல் நாள் இரவும், காலையிலும்  படித்த அனைத்தும் மறந்தது போல் இருக்கும். அதை குறித்து பயம் கொள்ள வேண்டாம். தேர்வு மையத்தில் அனைத்தும் நினைவிற்கு வரும்.
எல்லா தேர்வாளர்களும் அனைத்து பாடங்களையும் படித்து விட இயலாது. ஆதலால், சில பகுதிகளை விட்டு விட்டோம் என்று கவலை கொள்ள வேண்டாம். நாமெல்லாம் தேர்வுக்கு 6 மாதம் கொடுத்தாலும் இதே மனநிலையோடு(சில பகுதிகளை விட்டு விட்டோமே) தான் தேர்வை அணுகுவோம்!!!
தேர்வு தொடங்குவதற்கு 2 மணி நேரத்திற்கு முன்பாகவே படிப்பதை நிறுத்தி விடுங்கள்!!! தேர்வு தொடங்கும் முதல் நிமிடம் வரை படித்து கொண்டிருந்தால், மனம் பதற்றத்தோடும் அழுத்தத்தோடும் இருக்கும். அதே பதற்றத்தோடு தேர்வை அணுகினால், மதிப்பெண் குறையுமே தவிர அதிகமாகாது. மாறாக, எதற்கு கவலைப்படாமல் அணுகினால், தெரியாக கேள்விக்கு கூட விடையளிக்க முயற்சிக்கலாம்.
நன்கு படிக்கும் தேர்வாளர்கள், உங்கள் அறையிலே அமர்ந்திருக்கலாம். அது உங்களது தன்னம்பிக்கையை குறைக்கும். உங்களை தவிர, மற்றவரை கவனிப்பதை தவிர்க்க வேண்டும்!!! அறையில் முதல் பெஞ்சில் இடம் கிடைத்தால் நன்று!!!!
வினாக்களை அணுவதில் இரு முறைகள் உள்ளன. 1. எண் வரிசையாக ஒன்று விடாமல், அனைத்திற்கு விடையளிப்பது. 2. வினாக்களை தேர்வு செய்து விடைகளை அளிப்பது.
என்னை பொறுத்த வரை, முதல் முறை என்பது நேரத்தை அதிகமாக எடுத்து கொள்ளும். இரண்டாவது முறை சிறந்தது என்பேன். இருந்த போதிலும், உங்களுக்கு எது சரியென்று படுகிறதோ…. அதை செயல்படுத்துங்கள்!!!
இரண்டாவது முறை- முதலில் நன்கு தெரிந்த வினாக்களுக்கு விடையளிப்பது. இதற்கு 1.45 மணி நேரம் எடுத்து கொள்ளலாம். குறைந்தபட்சமாக 120-130 வினாக்களுக்கு விடையளித்தால் சிறப்பு. அடுத்த படியாக, இதுவா?? அதுவா?? என்று இரட்டை நிலையுள்ள வினாக்களுக்கு விடையளிப்பது. 30-45 நிமிடங்கள் எடுத்து கொள்ளலலாம்.
அடுத்தப்படியாக…. மேலோட்டமாக படித்திருப்போம், சற்று யோசித்தால் விடை கிடைக்கும் என்ற நிலையுள்ள வினாக்களுக்கு விடையளிப்பது. 25 நிமிடங்கள் எடுத்து கொள்ளலலாம். கடைசி நிலை என்பது இங்கி பிங்கி பாங்கி தான்!!!!
கடைசி 5 நிமிடங்கள் தேர்வு எண் சரியாக எழுதப்பட்டுள்ளதா??? எதாவது ஒரு வினா விடையளிக்கப்படாமல் உள்ளதா??? என்று பார்க்க வேண்டும்.
தேர்வை சரியான நேரத்தில் முடிப்பது என்பது முக்கிய சவால்!!! அதற்கு பயிற்சி செய்வதை தவிர வேறு வழியில்லை!!! மேலும் தெரியாத கேள்விகளுக்கு நேரம் செலவிடுவதை தவிர்த்தாலே போதும்!!!
உங்களுக்கு அளிக்கப்படுவது என்னவோ!!! 180 நிமிடங்கள் மட்டுமே… ஆனால், 200 வினாக்கள் உள்ளது. ஆதலால், ஒவ்வொரு வினாவிற்கும் 1 நிமிடத்திற்கு விடையளிக்க வேண்டிய அவசியத்தை மறந்து விடாதீர்கள்!!!
தெரிந்த கேள்விகளுக்கு 10 வினாடிகளே போதும்!!! அதிலும் கேள்வி பெரிதாக இருந்தால், அதிக பட்சமாக 30-40 வினாடிகளுக்குள் முடிக்க வேண்டும். தெரியாத கேள்விகளுக்காக, அதிக நேரம் செலவிட்டால், நன்கு தெரிந்த கேள்விகள் கடைசி நேரத்தில் வாய்ப்புண்டு.
சில சமயங்களில் நன்கு தெரிந்த வினாக்களுக்கும் தவறாக விடையளிக்க வாய்ப்புண்டு!!! அது போல், விடை குறிக்கையில் எண்ணை மாற்றி குறிக்கலாம்!!! அதற்கு கவலை வேண்டாம்!!! ஏனெனில் உங்களுக்கு தெரியாமல் இருந்த வினாக்களுக்கு அளித்த சரியான விடையால் சமன் செய்ய பட்டு விடும்!!!!
தற்கால வினாத்தாள்களில், வினாக்களின் தன்மை வெகுவாக மாறியுள்ளது. அதாவது பொருத்துக, கீழ்கண்டவற்றில் எது சரி/தவறு, கூற்று,காரணம் வடிவ வினாக்கள், AB சரி மற்றும் C தவறு வகை வினாக்கள் என பல்வேறு மாற்றங்களை அடைந்துள்ளது. இவையெல்லாம், உங்களின் படிக்கும் நேரத்தினை அதிகப்படுத்தி, மறைமுக அழுத்தத்தினை ஏற்படுத்தும் வழியாகும். இதனை தெளிவாக கையாள வேண்டும்.
கேள்வித்தாளின் தன்மை கடினமாக இருந்தால், கவலை கொள்ள வேண்டாம்.  ஏனனெனில் கடினம் என்பது உங்களுக்கு மட்டுமல்ல!!! தேர்வு எழுதும் அனைவருக்கும் தான்!!!அதனால் தேர்வு அறையில் உண்டாகும் மன அழுத்தத்தை குறைக்க முயல வேண்டும். தேர்வு எளிதாக இருந்தாலும்  சில  பிரச்சனைகள் உண்டு. கேள்வி எளிது தானே??? என்ற மனநிலை வந்து விட கூடாது!!! கடினமான வினாத்தாளை விட, எளிதாக வினாத்தாளிளே பிரச்சனைகள் அதிகம்!!!!
தெரியாக கேள்விகள் வரலாம். அதையெல்லாம் படிக்கவில்லையே என்று கவலை வேண்டாம். Elimination process வழியே விடைய:ளிக்க முயற்சிக்கலாம். அதாவது நான்கு தெரிவு விடைகளில் எதுவெல்லாம் வராது என்று உங்களால் ஊகிக்க முடியும். அவ்வாறாக, ஒவ்வொன்றாக நீக்கி, கடைசியில் விடையை கண்டு பிடிக்க முயற்சிக்கலாம்!!!
3/4 வருட கல்லூரி படிப்போ அல்லது 90 நாட்கள் தேர்வு படிப்போ முக்கியம் இல்லை !!! ஆனால் 3 மணி நேர தேர்வு என்பது மிக முக்கியமானது. எப்படி படிப்பது என்பதை தாண்டி, அதை எப்படி வினாத்தாளில்  செயல்படுத்துகிறோம் என்பது மிக முக்கியம்!!!
அந்த 3 மணி நேரமே முக்கியம் என்பதை மட்டும் மறந்து விடாதீர்கள்!!
தேர்வில் வெற்றி பெற வாழ்த்துகிறோம்!
என்றும் உங்கள் நலனில்...

Comments

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)