WhatsApp- Latest Update

வாட்ஸ் அப் செயலியைத் திறக்காமலேயே வேண்டியவருக்கு மட்டும் மெசேஜ் செய்யும் புதிய வசதியை அந்நிறுவனம் அறிவித்துள்ளது. 
வாட்ஸ் அப் மற்றும் ஃபேஸ்புக் நிறுவனம் தங்களது பயனாளர்களுக்கு ஏற்ற பல புதிய வசதிகளைத் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. ஃபேஸ்புக் F8 கான்ஃபிரன்ஸிங்கில் அந்நிறுவனத்துக்குச் சொந்தமான ஃபேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகளில் பயனர்களை ஈர்க்கும் பல புதிய வசதிகள் அறிமுகப்படுத்தப்ட்டன.

அதில் ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப்பில் சாட் செய்யும் முறையில் புதிய வசதிகள், வாட்ஸ் அப் குரூப் வீடியோ கால், ஸ்டிக்கர்ஸ், அனுப்பிய மெசேஜை டெலிட் செய்யும் நேரத்தை அதிகமாக்கியது, ஸ்மார்ட் ஃபோனில் டெலீட் செய்யப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்களை மீண்டும் பதிவிறக்கம் செய்வது போன்ற பல அம்சங்களைத் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.தற்போது வாட்ஸ் அப் செயலியைத் திறக்காமலேயே வேண்டியவருக்கு மெசேஜ் செய்யும் புதிய வசதியை வாட்ஸ் அப் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளதாக W beta- வில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதன் படி அவர்கள் உருவாக்கியுள்ள 'wa.me'  என்ற டொமைன்-யை பதிவு செய்து அதில் பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த வசதிக்குப் பயனர்கள் தங்களின் வாட்ஸ் அப்-பை 2.18.138 க்கு மேம்படுத்த வேண்டும். இந்த வசதி ஆன்ராய்டு பீட்டாவில் மட்டும் தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது. 
பயனர்கள் முதலில் https://wa.me/91 (phone number) என்ற தளத்தில் தாங்கள் மெசேஜ் செய்ய விரும்புவரின் ஃபோன் நம்பரை டைப் செய்ய வேண்டும். அதன் பின் URL தானாக வாட்ஸ் அப் பகுதிக்குப் பயனர்களைக் கொண்டு செல்லும். அங்கு நீங்கள் நம்பர் பதிவிட்டவருடன் மட்டும் மெசேஜ் செய்யலாம். நீங்கள் பதிவிட்ட நம்பர் தவறானதாக இருந்தால் அதுவே தவறு எனச் சுட்டிக்காட்டி விடும்.

Comments

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)