Departmental Examination 2018 - TNPSC Official Tentative Answer Key
Departmental Examination 2018 - TNPSC Official Tentative Answer Key
அரசுப் பணி தேர்வாணையம் மூலம் மே 24 முதல் 31ம் தேதி வரை நடந்த 147 துறை தேர்வுகளுக்கு உத்தேச விடை பட்டியலை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அறிக்கை: அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவிக்கப்பட்ட 147 துறைத் தேர்வுகளை கடந்த மே 24ம் தேதி முதல் 31ம் தேதி வரை கொள்குறி வகை, விவரித்து எழுதுதல் என்ற புதிய பாடத்திட்டத்தின்படி தூத்துக்குடி மாவட்டம் நீங்கலாக சென்னை உட்பட 31 மாவட்ட தேர்வு மையங்களில் நடத்தியது. தேர்வின் கொள்குறி வகையை சார்ந்த 114 தேர்வுகளின் உத்தேச விடைகளை தேர்வாணையம் இணையதளத்தில் நேற்று வெளியிட்டுள்ளது. இதுபோன்று துறைத்தேர்வின் உத்தேச விடைகளை இணையதளத்தில் வெளியிடுவது இதுவே முதன் முறையாகும்.
துறைத் தேர்வெழுதிய விண்ணப்பதாரர்கள், எழுதிய கொள்குறி வகைத் தேர்வின் விடைகளை தேர்வாணைய இணையதளத்தில் சரிபார்த்துக் கொள்ளலாம். உத்தேச விடைகள் மீது மறுப்பு ஏதேனும் இருப்பின் தேர்வின் உத்தேச விடைகள் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்ட ஒருவார கால அவகாசத்திற்குள் விண்ணப்பதாரர்கள் தேர்வு நுழைவு சீட்டு, பதிவு எண், தேர்வின் பெயர், தேர்வு குறியீட்டு எண், வினா எண், வினாவின் உத்தேச விடை, வினாவிற்கு விண்ணப்பதாரர் கூறும் விடை போன்ற தகவல்களை தெளிவாக குறிப்பிட்டு, விரைவு தபால் மூலமாகவோ அல்லது contacttnpsc@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ விண்ணப்பதாரர் தங்களுடைய மனுக்களை அனுப்பலாம். இவ்வாறு டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.