உங்களுக்காக காத்திருக்கும் 5 அரசாங்க வேலைகள்!

படித்து முடித்த இளைஞர்கள் பலர் பல தனியார் துறைகளில் வேலை கிடைத்தாலும் அரசாங்க வேலை கிடைத்தால் இன்னும் மகிழ்ச்சியாக இருக்கும் என தொடர்ந்து அரசாங்க வேலையை தேடிக் கொண்டே இருப்பர். ஆனால், சரியான வழிகாட்டுதல் இன்றி அவர்களது முயற்சிகள் சில நேரங்களில் தோல்வியிலேயே முடிந்து
விடுகிறது. அவ்வாறனவர்களுக்காகவே நம் தமிழ் கரியர்இந்தியா பக்கம்தினந்தோறும் பல வேலை வாய்ப்பு தகவல்களை வெளியிட்டு வருகிறது.உங்களுக்காக காத்திருக்கும் 5 அரசாங்க வேலைகள்!    அந்த வகையில் இந்தியாவின் பல்வேறு துறைகளில் 2018 செப்டம்பர் மாதத்தில் அறிவிக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்புகள் குறித்த தகவல்கள் இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது. டாப் 5 அரசு வேலைகள் 1. கொல்கத்தா போர்ட் டிரஸ்ட் 2. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) 3. இந்திய அறிவார்ந்த தகவல் தொடர்பு அமைப்புகள் லிமிட்டு (ICSIL) 4. இந்தியா - திபெத் எல்லைப் பாதுகாப்பு பணி 5. மேற்கு வங்காள மாநகர சேவை ஆணையம்
 1. கொல்கத்தா போர்ட் டிரஸ்ட் வேலை வாய்ப்பு உங்களது கல்வித் தகுதிக்கு ஏற்ப பயிற்சியும், ஒப்பந்த அடிப்படையில் சிறந்த வேலையும் கொல்கத்தா போர்ட் டிரஸ்ட்டில் வழங்கப்படவுள்ளது. வேலை : பைலட் பணியிடம் : கொல்கத்தா போர்ட் டிரஸ்ட் கல்வித் தகுதி : கடல்சார் விஞ்ஞானப் பிரிவில் பி.எஸ்சி அல்லது ட்ரேஜ் மாஸ்ட்டர் சான்றிதழ் வயது வரம்பு : அதிகபட்சமாக 25 ஊதியம் : ரூ. 29,100 முதல் ரூ. 54,500 விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 2018 அக்டோபர் 26 விண்ணப்பிக்க வேண்டிய இணைய முகவரி : http://www.kolkataporttrust.gov.in/

2. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) விண்ணப்பதாரர்களின் சான்றிதழ் சரிபார்ப்புக்கு பிறகு தேர்வாளர்கள் பட்டியலிடப்படுவர். பின், எழுத்துத் தேர்வின் மூலமும், நேர்முகத் தேர்வுன் மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவர். துறை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் கல்வித் தகுதி : மானுடவியல், சமூகவியல், பொருளாதாரம், சமூகப் பணி உள்ளிட்ட ஏதேனும் ஓர் பாடப்பிரிவில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தில் பி.ஏ., அல்லது பி.எஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும். வேலை : பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத் துறை பணி இடம் : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் கல்வித் தகுதி : மானுடவியல், சமூகவியல், பொருளாதாரம், சமூகப் பணி உள்ளிட்ட ஏதேனும் ஓர் பாடப்பிரிவில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தில் பி.ஏ., அல்லது பி.எஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு : 21 முதல் அதிகபட்சம் 30 வரை. ஊதியம் : ரூ. 19,500 முதல் ரூ. 62,000 வரை விண்ணப்பிக்க கடைசி நாள் : 2018 அக்டோபர் 15 வரை விண்ணப்பிக்கும் முறை : இங்கே கிளிக் செய்யவும் - https://tamil.careerindia.com/jobs/tnpsc-recruitment-2018-mass-interviewer-posts-003968.html

3. இந்திய அறிவார்ந்த தகவல் தொடர்பு அமைப்புகள் லிமிட்டு (ICSIL) ஐசிஎஸ்ஐஎல் நிறுவனமானது சிறுவர்களை பாதுகாப்பாக கவனித்துக்கொள்ளவும், அவர்களின் தேவைகளை கவனமாக மேற்பார்வையிடவும் செயல்படும் அரசாங்க நிறுவனமாகும். தற்போது ஐசிஎஸ்ஐஎல்-யில் காலியாக உள்ள 41 காலிப் பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. பணி : கண்காணிப்பாளர் நிறுவனம் : ஐசிஎஸ்ஐஎல் கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட பள்ளியில் 10-வது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு : 25 முதல் அதிகபட்சம் 40 வயதிற்குள் ஊதியம் :ரூ.13896 / மாதம் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 2018 அக்டோபர் 1 விண்ணப்பிக்க வேண்டிய முகவரி மற்றும் இதர தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும். http://icsil.in/

4. இந்தோ - திபெத் எல்லைப் பாதுகாப்பு பணி இந்தியா - திபெத்தின் எல்லையில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுவதற்காக பிரத்யேகமாக நிறுவப்பட்டது தான் இந்தோ- திபெத் எல்லைப் பாதுகாப்பு படை. நேர்முகக் காணல் மற்றும் தேர்வின் மூலம் தற்கான ஆட்கள் தேர்வு செய்யப்படுவர். பணி : சிறப்பு மற்றும் பொது மருத்துவ அதிகாரி நிறுவனம் : இந்தோ - திபெத் எல்லைப் பாதுகாப்பு பணி கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட மருத்துவத் திறன் வயது வரம்பு : அதிகபட்சம் 67 ஊதியம் : சிறப்பு மருத்துவ பிரிவிற்கு - ரூ.85000, பொது மருத்துவ பிரிவிற்கு : ரூ.75000 விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 2018 அக்டோபர் 29 விண்ணப்பம் மற்றும் இதர தகவல்களுக்கு https://www.itbpolice.nic.in/ இதனை கிளிக் செய்யவும்.

5. மேற்கு வங்காள மாநகர சேவை ஆணையம் மேற்கு வங்காளத்திற்கு உட்பட்ட கல்யாணி நகராட்சியின் கீழ் பல்வேறு துறைகளில் பணியாற்ற ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். பணிகள் : கிளர்க், காசாளர், டைப்பிஸ்ட், உதவி பொறியாளர், துணை உதவி பொறியாளர் மற்றும் கணக்காளர் நிறுவனம் : மேற்கு வங்காள மாநகர சேவை ஆணையம் கல்வித் தகுதி : மத்யாமிக் தேர்ச்சி, வர்த்தகத் துறை பிரிவில் தேர்ச்சி, டிப்ளமோ சிவில் இன்ஜினியரிங் வயது வரம்பு : 18 முதல் 40 வயது வரை ஊதியம் : ரூ.5400 முதல் ரூ.40000 வரை விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 2018 அக்டோபர் 31 விண்ணப்பம் மற்றும் இதர தகவல்கள் : http://www.mscwb.org/html/index.html இணையதளத்தி கிளிக் செய்யவும்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)