BSNL வழங்கும் அதிரடி தீபாவளி சலுகை

BSNL . நிறுவன பயனர்களுக்கு அந்நிறுவனம் தீபாவளி சலுகையை அறிவித்துள்ளது. புதிய அறிவிப்பின் மூலம் பயனர்களுக்கு கூடுதல் டாக்டைம் வழங்கப்படுகிறது.


BSNL . நிறுவன பயனர்களுக்கு அந்நிறுவனம் தீபாவளி சலுகையை அறிவித்துள்ளது. புதிய அறிவிப்பின் மூலம் பயனர்களுக்கு கூடுதல் டாக்டைம் வழங்கப்படுகிறது. இந்த சலுகை அனைத்து டெலிகாம் வட்டாரங்களிலும் அக்டோபர் 25ம் தேதி முதல் நவம்பர் 11ம் தேதி வரை வழங்கப்படுகிறது.

புதிய சலுகையில் கூடுதல் டாக்டைம் மட்டுமே வழங்கப்படுகிறது என்பதால் மொபைல் டேட்டா அல்லது BSNL போன்றவை வழங்கப்படவில்லை. அதன்படி புதிய சலுகையின் கீழ் ரூ.180 சலுகையில் ரூ.190 டாக்டைம், ரூ.410 சலுகையில் ரூ.440 டாக்டைம், ரூ.510 சலுகையில் ரூ.555 மதிப்பிலான டாக்டைம் வழங்கப்படுகிறது.


சமீபத்தில் BSNL. பிரீபெயிட் பயனர்களுக்கு வருடாந்திர சலுகையை அறிவித்தது.BSNL .புதிய பிரீபெயிட் சலுகைகள் ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா நிறுவனங்களுக்கு போட்டியாக அமைந்திருக்கிறது. BSNL. ரூ.1,699 மற்றும் ரூ.2,099 சலுகையில் பயனர்களுக்கு டேட்டா, வாய்ஸ் கால், SMS . மற்றும் பிரத்யேக ரிங்பேக் டோன் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

BSNL ரூ.1,699 சலுகையில் பயனர்களுக்கு தினமும் 2 ஜி.பி. டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், 100 SMS உள்ளிட்டவை 365 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது. ரூ.2,099 சலுகையில் தினமும் 4 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது. நிர்ணயிக்கப்பட்ட டேட்டா தீர்ந்ததும் டேட்டா வேகம் 80kbps ஆக குறைக்கப்படும்.


டேட்டாவுடன் பயனர்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 SMS பிரத்யேக ரிங்பேக் டோன் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இரண்டு சலுகைகளும் அக்டோபர் 29ம் தேதி முதல் கிடைக்கிறது. இந்த சலுகையில் 365 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)