TNPSC GROUP IV சான்றிதழ் பதிவு விபரம் அறிவிப்பு

குரூப் - 4' தேர்வில், சான்றிதழ் பதிவு செய்தவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, சுதன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:



குரூப் - 4 பதவியில், 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலி இடங்களை நிரப்ப, இந்த ஆண்டு பிப்., 11ல் எழுத்து தேர்வு நடத்தப்பட்டது. ஜூலை, 30ல் தேர்வு முடிவு வெளியானது.தேர்வில், மொத்தம்,17 லட்சம் பேர் பங்கேற்று, 14 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றனர்.அவர்களின், மதிப்பெண் மற்றும் இட ஒதுக்கீடு விதிகளின் படி, தரவரிசை தயாரிக்கப்பட்டது.இதில், 31 ஆயிரத்து, 425 பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வு செய்யப்பட்டனர்.  
அவர்களை ஆக., 30 முதல், செப்., 18 வரை, www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில், ஆன்லைனில் சான்றிதழ்களை பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டது. இதன்படி, சான்றிதழ்களை பதிவு செய்தவர்களின் விபரம், டி.என்.பி.எஸ்.சி.,யின் இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.தேர்வர்கள், வரும், 2ம்தேதி வரை, தங்கள் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியைபயன்படுத்தி, விபரங்களைதெரிந்து கொள்ளலாம்.இதுகுறித்து, சந்தேகங்கள் இருந்தால், 044- - 2530 0336, -2530 0337 என்ற, தொலைபேசி எண்களில், இன்று முதல் வரும், 2ம் தேதி வரை, தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)