Today School Morning Prayer Activities - 29.10.18

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 29.10.18

திருக்குறள்


அதிகாரம்:விருந்தோம்பல்

திருக்குறள்:86

செல்விருந் தோம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்விருந்து வானத் தவர்க்கு.

விளக்கம்:

வந்த விருந்தினரைப் போற்றி, இனிவரும் விருந்தினரை எதிர் பார்த்திருப்பவன், வானுலகத்தில் உள்ள தேவர்க்கும் நல்ல விருந்தினனாவான்.


பழமொழி

A journey of thousand miles begins with a single step.

ஆயிரம் கல் தொலைவுப் பயணம் கூட ஒரே ஒரு எட்டில் தான் தொடங்குகிறது.

இரண்டொழுக்க பண்பாடு

* ஏழைகளுக்கும் இயலாதவர்களுக்கும் என்னால் முடிந்த வரை பொருளாலும் உடலாலும் உதவி செய்வேன்.

* என்னால் முடிந்த வரை பொய் சொல்லாமல் நேர்மையாக இருக்க முயற்சி செய்வேன்.

 பொன்மொழி

இலட்சியம், குறிக்கோள்

மாபெரும் லட்சியத்தையும் வெற்றியில் நம்பிக்கையையும் வாழ்க்கையில் ஏற்றுக்கொண்டால், யாரும் உயர்ந்த நிலையை அடைய முடியும்!

         - அம்பேத்கர்

பொது அறிவு

1.அபு மலை (MOUNT ABU)எங்கு உள்ளது?

 இந்தியா (ராஜஸ்தான்)

2. தேசிய மனித உரிமை ஆணையத்தின்   தலைவர் யார்?

 H.L. தத்து (H.L.DATTU)

தினம் ஒரு பாரம்பரிய உணவுப் பொருளின் மகத்துவம்

கம்பு



1. உடலுக்கு குளிர்ச்சியைத் தருகிறது.

2. சோர்வு நீங்கி புத்துணர்வு பெற உதவும்.

3. உடல் பலம் பெறவும், அஜீரணக் கோளாறுகளை சரிசெய்யும் உதவுகிறது.

English words and meaning

Rafle.       குலுக்கு சீட்டு
Rancour.  துவேசம்
Reinstate.
முன் நிலையில் வை
Rejoice.    மகிழ்ச்சியடை
Ruth.          இரக்கம்

அறிவியல் விந்தைகள்

வானவில்

*மழைத் துளிகளின் உள்ளே சூரிய ஒளிக்கதிர்கள் ஊடுருவிச் செல்லும்போது வானவில்லாகிய நான் தோன்றுகிறேன்
* என்னை காணும் அனைவரும் வயது வித்தியாசம் இன்றி மகிழ்வது எனக்கு ஒருபெரிய மகிழ்ச்சி
 *என்னில் ஏழு நிறங்கள் உள்ளன.  இதைக் கண்டுபிடித்தவர் ஐசக் நியூட்டன் (Isaac Newton).
*நான் எப்போதும் ஏழு நிறங்களோடுதான் தோன்றுவேன் என்பதில்லை.
*நான் காலை, மாலை வேளைகளில் தோன்றும் போது  மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு நிறங்களில் மட்டுமே தோன்றுவேன்.
*நான் பன்னிரண்டு வெவ்வேறு வகையில் தோன்றுவேன்.  அதை நீங்கள் சமீபத்தில் தான் கண்டுபிடித்துள்ளீர்கள்.
*என்னில் நிறங்கள் தெளிவாகத் தெரிவது மழைத் துளிகளின் அளவைப் பொறுத்தது.
*என் நிறங்களை நிர்ணயிப்பது தொடுவானத்துக்கும் சூரியனுக்கும் இடைப்பட்ட தூரம்தான்.
* படைக்கப்பட்ட ஆரம்பத்தில்  கார்மேகங்கள், இடி,  மின்னல் கண்டு பயந்து நடுங்கி விட்டேன். ஆனால் சூரியன் தன் இன்முகம் காட்டி என்னை தட்டிக் கொடுத்து மக்கள் என்னைக் கண்டு மகிழ்வதை சுட்டிக்காட்டியது.
* தற்போது என் பணியை நான் சந்தோஷமாய் செய்கிறேன்.


நீதிக்கதை

ஆசை

கங்கையில் ஒரு வியாபாரி குளித்துக் கொண்டிருந்தான். அப்போது அழகான கைத்தடி ஒன்று மிதந்து வந்தது. அதை எடுத்துக் கொண்டு கரையை நோக்கி நீந்தினான் அவன். அப்போது ஒரு நீர்ச்சுழலில் மாட்டிக் கொண்டான்.தப்பிக்கக் கடும் முயற்சி செய்தான்.ஒரு வழியாகப் போராடி உயிர் பிழைத்தான். ஆனால் அந்தக் கைத்தடி எங்கோ நழுவிப் போய் விட்டது.

கரைக்கு வந்த அவன் அழகான கைத்தடியை இழந்து விட்டேனே என்று கதறினான். அங்கு இருந்த ஒரு துறவி, ''அய்யா, நீங்கள் குளிக்க வெறுங்கையுடன் வந்ததை பார்த்தேனே? இப்போது கைத்தடியை நழுவ விட்டதாகக் கூறுகிறீர்களே?'' என்று கேட்டார்.
வியாபாரி நடந்ததைக் கூறினான்.

துறவி சொன்னார், ''அய்யா, உங்களைப் பார்த்தால் எனக்கு சிரிப்பு வருகிறது. கங்கையில் கைத்தடி மிதந்து வந்தது. இப்போதும் அது மிதந்து கொண்டு போகிறது. அப்படி இருக்கையில் அது உங்கள் கைத்தடி என்று எப்படிக் கூறுகிறீர்கள்? அந்தக் கைத்தடியை இரண்டு நிமிடங்கள் தங்கள் கையில் வைத்திருந்ததனால் அது உங்களுடையது என்று சொந்தம் கொண்டாட உரிமை பெற்று விட்டீர்களா?''

வாழ்க்கையில் எதுவும் நிச்சயமில்லை. பிறக்கும் போது யாரும் எதையும் கொண்டு வருவதில்லை. இறக்கும் போதும் எதையும் கொண்டு போவதில்லை. ஆனால் வாழ்வில் பலவற்றை உரிமை கொண்டாடுகிறோம். நமது துன்பங்களுக்கெல்லாம் அது தான் காரணம்.
_________🌻___________
இன்றைய செய்திகள்

29.10.18

* ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட பிறகு தூத்துக்குடியில் காற்று மாசின் அளவு குறைந்துள்ளது என்று  தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* மழை, வெள்ளம் போன்ற இயற்கை இடர்பாடுகளை முன் கூட்டியே அறிந்து, இழப்புகளை தவிர்க்கும் வகையில், டி.என்.ஸ்மார்ட் (TN SMART) என்ற 'மொபைல் ஆப்' அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

* வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சூழல் தற்போது வரை உருவாகவில்லை என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

* தொடர்ந்து 3 ஒருநாள் போட்டிகளில் சதமடித்ததன் மூலம்  ஒருநாள் போட்டி வரலாற்றில் 'ஹாட்ரிக்' சதமடித்த முதல் இந்தியர் என்ற புதிய வரலாறை  விராட் கோஹ்லி படைத்தார்.

*  மே.இ.தீவுகள், ஆஸ்திரேலிய டி20 தொடருக்கு தோனி இல்லை: இளம் வீரர்களுக்கு வாய்ப்பு, புதிய மாற்றங்களுடன் அணி அறிவிப்பு

Today's Headlines


🌻The Tamil Nadu Pollution Control Board (TPDC) said that the pollution of air was reduced after the closure of the Sterlite plant.

🌻 Tirupur: TN SMART 'Mobile App' has been introduced to prevent losses from rainfall and floods and other natural calamities

🌻The weather forecast for the North-east monsoon has not been established yet, according to the Chennai Meteorological Center.

🌻Virat Kohli created the new history  of a hat-trick century in  one-day tournament by playing in 3 ODI  continuously

🌻Dhoni is not in the Australian T20 series: Young players would have a chance,Team was announced with new  changes 🤝

Prepared by
Covai women ICT_போதிமரம்

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

Class 6th English Learning Outcomes Chapter-1

6,7,8,9,10 Std English Notes of Lesson Collection 2022