ஏர்டெல் அறிமுகம் செய்துள்ள 5 புதிய ரீசார்ஜ் திட்டங்கள்.! மிஸ் பண்ணிடாதீங்க.!

இந்தியாவின் இரண்டாவது பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல் நிறுவனம் தற்பொழுது 5 சிறப்பு புது ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது.

ஏர்டெல் நிறுவனம் தனது பயனர்களுக்குப் பல சலுகைகளையும் பல புதிய திட்டங்களையும் அறிவித்துக்கொண்டே இருக்கிறது. ஏர்டெல் இன் புதிய ஸ்மார்ட் ரீசார்ஜ் ப்ரீபெய்ட் திட்டத்தில் ரூ.34, ரூ.64, ரூ.94, ரூ.144 மற்றும் ரூ.244 என்ற ஐந்து புதிய திட்டங்களை அதிகப்படியான 84 நாட்கள் வேலிடிட்டியுடன் ஏர்டெல் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
ஏர்டெல் ஸ்மார்ட் ரீசார்ஜ் ப்ரீபெய்ட் திட்டம் ரூ.34:
தற்பொழுது அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டத்தில் மிகக் குறைந்த விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த ரூ.34 திட்டத்தில் 100 எம்.பி 4ஜி டேட்டா பயன்பாடு, ரூ.25.66க்கு டாக்டைம் சேவையுடன் அவுட்கோயிங் கால்களுக்கு வினாடிக்கு 2.5 பைசா என்று 28 நாட்கள் வேலிடிட்டியுடன் கிடைக்கிறது.

ஏர்டெல் ஸ்மார்ட் ரீசார்ஜ் ப்ரீபெய்ட் திட்டம் ரூ.64:
ஏர்டெல் ப்ரீபெய்ட் ரூ.64 திட்டத்தில் 200 எம்.பி 4ஜி டேட்டா பயன்பாடு சேவை, ரூ.54க்கு டாக்டைம் சேவையுடன் அவுட்கோயிங் கால்களுக்கு வினாடிக்கு 1 பைசா என்று 28 நாட்கள் வேலிடிட்டியுடன் தற்பொழுது ஏர்டெல் பயனர்களுக்கு கிடைக்கிறது.
ஏர்டெல் ஸ்மார்ட் ரீசார்ஜ் ப்ரீபெய்ட் திட்டம் ரூ.94:
ஏர்டெல் ப்ரீபெய்ட் ரூ.94 திட்டத்தில் 500 எம்.பி 4ஜி டேட்டா பயன்பாடு சேவை, ரூ.94க்கு முழு டாக்டைம் சேவையுடன் அவுட்கோயிங் கால்களுக்கு நிமிடத்திற்கு 30 பைசா என்று 28 நாட்கள் வேலிடிட்டியுடன் தற்பொழுது கிடைக்கிறது.
ஏர்டெல் ஸ்மார்ட் ரீசார்ஜ் ப்ரீபெய்ட் திட்டம் ரூ.144:
ஏர்டெல் ப்ரீபெய்ட் ரூ.144 திட்டத்தில் 1 ஜிபி 4ஜி டேட்டா சேவை, ரூ.144க்கு முழு டாக்டைம் சேவையுடன் அவுட்கோயிங் கால்களுக்கு நிமிடத்திற்கு 30 பைசா என்று 42 நாட்கள் வேலிடிட்டியுடன் தற்பொழுது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஏர்டெல் ஸ்மார்ட் ரீசார்ஜ் ப்ரீபெய்ட் திட்டம் ரூ.244:
ஏர்டெல் ப்ரீபெய்ட் ரூ.244 திட்டத்தில் 2 ஜிபி 4ஜி டேட்டா சேவை, ரூ.244க்கு முழு டாக்டைம் சேவையுடன் அவுட்கோயிங் கால்களுக்கு நிமிடத்திற்கு 30 பைசா என்று 84 நாட்கள் வேலிடிட்டியுடன் தற்பொழுது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)