அறிவோம் அறிவியல் -வவ்வாலுக்குக் கண் தெரியாவிட்டாலும் எப்படி எதன் மீதும் மோதாமல் பறக்கிறது?

பூச்சியுண்ணும் வவ்வாலுக்குப் பார்வையே கிடையாது என்று சொல்லிவிட முடியாது, சாரதா. பார்க்கும் சக்தி மிக மிகக் குறைவாக இருக்கும். அதை வைத்துக்கொண்டு தெளிவாகப் பார்க்க முடியாது என்பதால்
வவ்வால்கள் ஒலியை நம்பியிருக்கின்றன. இவை வெளிப்படுத்தும் மீயொலி (Ultra sound) அலைகள் அதிக அதிர்வெண்களைக் கொண்டதாக இருக்கிறது. மனிதர்களால் 80 முதல் 20 ஆயிரம் அதிவெண் அலைகளைத்தான் உணரமுடியும். ஆனால் வவ்வால்களால் 1,50,000 அதிர்வெண்களை உணர்ந்துகொள்ளமுடியும்.

அதனால் பறக்கும்போது ஒலிகளை எழுப்பிக்கொண்டே செல்கின்றன. இந்த மீயொலிகள் எதிரில் இருக்கும் பொருள், உயிரினம் போன்றவற்றில் பட்டு, பூச்சியுண்ணும் வவ்வாலுக்கு வேகமாகத் திரும்பிவருகின்றன. இதை வைத்து எதிரில் பொருளோ எதிரியோ இருப்பதை அறிந்து, திசையை மாற்றிக்கொண்டு, மோதாமல் பறந்துவிடுகின்றன. தென் அமெரிக்காவில் வாழும் மீன் பிடிக்கும் வவ்வால்கள், குளத்தின் மேல் பகுதியில் மீயொலி அலைகளைச் செலுத்தி, மீன்களைப் பிடித்துவிடுகின்றன

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)