கொதிக்கும் சூரியனை ஆராய புறப்பட்ட தி பார்கர் சோலார் ப்ரோப்: தாங்குமா?
தொடர்ந்து பல்வேறு நாடுகள் பல விண்கலன்களை விண்ணில் அனுப்பிக் கொண்டே தான் இருக்கிறது, இந்நிலையில் நாசா தனது புதிய யோசனையை செயல்படுத்தி உள்ளது, அது என்னவென்றால் நாசா உருவாக்கியுள்ள பார்கர் சோலார் விண்கலம், சூரியனை நெருங்கிச் சென்று சாதனை புரிந்
துள்ளது.
நாசா அமைப்பு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்த பார்க்கர் சோலார் விண்கலத்தை விண்ணில் செலுத்தியது, அதன்படி ஃபுளோரிடா மாகாணத்திலுள்ள கேப் கேனவரல் என்ற ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து தான், இந்த பார்க்கர் சோலார் விண்கலம் சூரியனுக்கு ஏவப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
சுமார் 612கிலோ எடை
இந்த விண்கலம் சுமார் 612கிலோ எடை, 9அடி 10-இன்ச் நீளமும் கொண்டுள்ளது, பின்பு சூரியனின் மேற்பரப்பு வரை சென்று சூரியனை ஆய்வு செய்து இதுவரை தெரியாத பல தகவல்கள் வழங்கியுள்ளது.
1400 டிகிரி செல்சியஸ்
இதற்குவேண்டி 1400 டிகிரி செல்சியஸ் வரையிலான வெப்பத்தை தாங்கும் வகையில் கார்பனால் உருவாக்கப்பட்ட வெளித்தகடு இவற்றுள் பொறுத்தப்பட்டுள்ளது, குறிப்பாக வெப்பச் சலனம், வெப்பக் கடத்தல் வெப்பக் கதிர்வீச்சு ஆகியவற்றால் பாதிக்கப்படாத அளவுக்கு பார்கர் விண்கலம் தயார் செய்து பாதுகாப்பாக சென்றுள்ளது.
ஜெர்மனி-அமெரிக்கா
இதேபோன்று கடந்த 1976-ம் ஆண்டு ஜெர்மனி-அமெரிக்கா கூட்டனியில் ஏவப்பட்ட ஹீலியோஸ் 2 என்ற விண்கலம் 42.73 மில்லியன் கிலோ மீட்டர் சூரியனை நெருங்கி சென்றது. இப்போது அனுப்பபட்ட பார்க்கர் சோலார் விண்கலம் 42.73 மில்லியன் கிலோ மீட்டர் தூரத்தை கடந்து சென்று ஹீலியோஸ் 2 விண்கலத்தின் சாதனை முறியடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
3.8மில்லியன்
விரைவில் (2024) இந்த பார்க்கர் சோலார் விண்கலம் சூரியனை நெருங்கிவிடும் என்றும், பின்பு 3.8மில்லியன் தொலைவில் சூரியனின்
மேற்பரப்புக்கு மேல் நிலைநிறுத்தப்பட்டு, 24மணி நேரமும் கண்காணித்து தகவல்களை வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.