#அறிவியல்-அறிவோம்: புயல்களுக்கு பெயர் வைப்பது எப்படி?

(S.ஹரிநாராயணன்)


புயல்களுக்கு பெயர் வைக்கும் பழக்கம் ஏற்கெனவே பல மேலை நாடுகளில் இருக்கிறது. புயல்களை இனம் கண்டு கொள்ள எளிதாக இருப்பதற்காகவே இந்த நடைமுறை. அதற்கு முன்னால் புயல் கரையைக் கடக்கும் ஊரின் பெயர் அதற்கு சூட்டப்படும். ஆனால், சில சமயம் ஒரே ஊரில்
இரண்டு புயல்கள் வரும். அதேபோல சில நாடுகளில் ஒரே சமயத்தில் மூன்று புயல்கள் ஒன்றாக வரும். அப்போதெல்லாம் அவற்றை வகைப்படுத்துவது இன்னும் கடினம். எனவே இந்த சிக்கல்களை தீர்க்கவே பெயர் வைக்கும் பழக்கம் ஏற்பட்டது.

2004-ம் ஆண்டு சார்க் அமைப்பில் இருக்கும் ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், பூடான், இந்தியா, மாலத்தீவுகள், நேபாளம், பாகிஸ்தான் மற்றும் இலங்கை 8 நாடுகள் இணைந்து இந்தப் பெயர்களை வழங்கின. இந்தப் பெயர்கள் வங்கக் கடல் மற்றும் அரபிக்கடல்களில் ஏற்படும் புயல்களுக்கு சூட்டப்படும். ஒரு நாடு 8 பெயர்களை வழங்கவேண்டும். அப்படி தற்போது 64 பெயர்கள் இருக்கின்றன. இந்த 64 பெயர்களும் முடிவடைய இருக்கும் நிலையில், மீண்டும் அனைத்து நாடுகளும் இணைந்து என்ன செய்யலாம் என முடிவெடுக்கும்.

புயலின் பெயரானது சிறியதாக, எளிதாக புரிந்துகொள்ளக் கூடிய வகையில் இருக்க வேண்டும். அதேபோல எந்த மத, இன, நாட்டு பிரிவினைரையும் புண்படுத்தும் வகையில் இருக்கக் கூடாது. நம்முடைய மொழியில் வைக்கும் பெயரானது, மற்றொரு நாட்டின் மற்றொரு மொழியில் மோசமான அர்த்தங்களை தந்தால் அது நிராகரிக்கப்பட்டு விடும்.

இந்தியா சார்பில் பரிந்துரை செய்யப்பட்ட 8 பெயர்களுமே பஞ்ச பூதங்களை குறிப்பவை. அக்னி, ஆகாஷ், பிஜிலி, ஜல், லெஹர், மேக், சாகர், வாயு. இதேபோல மற்ற ஏழு நாடுகளும் பெயர்களை வழங்கியுள்ளன.

அதில், தற்போது வைக்கப்பட்டுள்ள ‘கஜ’ எனும் பெயர் தாய்லாந்து நாடு வழங்கிய பெயர் என்பது குறிப்பிடத்தக்கது.

புயலுக்கு அது மையம் கொண்ட வானியல் ரீதியான புள்ளி விவரத்தைக் கொண்டே பெயரிடப்பட்டு வந்தது. அல்லது தொழில் நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டே அது எந்தமாதிரியான புயல் என குறிப்பிடப்பட்டு வந்தது. இதைக் குறிப்பிடுவதற்கும், செய்தியாக மாற்றுவதற்கும், ஆவணப்படுத்துவதற்கும் மிகவும் கடினமாக இருந்ததால் பின்னர், புயல் தோன்றும் காலத்தை ஒட்டி, நடக்கும் முக்கிய நிகழ்வுகளின் பெயர்களில் புயல்கள் அழைக்கப்பட்டன.

1900-க்குப் பின்னர்தான், புயலுக்குப் பெயர் வைக்கும் வழக்கம் உலக அளவில் தோன்றியது. ஆரம்பத்தில், பெண்களின் பெயர் தான் புயலுக்கு வைக்கப்பட்டு வந்தது. 1979-க்குப் பின்னர் தான், ஆண்கள் பெயரிலும் பெயர் வைக்கப்பட்டது.

இதன் பின்னர், ஒவ்வொரு கடல் பகுதி ரீதியாக புயலின் பெயர் ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டு பட்டியல் தயாரிக்கப்பட்டது. பசிபிக் கடல் பகுதி, வடக்கு அட்லாண்டிக் கடல் பகுதி என வெவ்வெறு கடல் பகுதிக்கு தனித்தனியே பெயர் பட்டியல் தயார் செய்து வைக்கப்பட்டிருக்கிறது

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

10th Std English One Mark Question Bank