அறிவியல் அறிவோம் :தலைசுற்றி மயக்கமுறச் செய்வது எது?
தலைசுற்றி மயக்கமுறச் செய்வது எது?
வட்டமாக, மிக வேகமாகச் சுற்றுபவன் திடீரென நின்றால் பொதுவாகத் தலைசுற்றி மயக்கம் ஏற்படும். சமச்சீரைக் கட்டுப்படுத்து
ம் காதின் உட்பகுதியிலுள்ள உணர்ச்சி நீர்மம் (Sensitive liquid) உடல் சுற்றுவது நின்றபிறகும் தொடர்ந்து சுற்றிக் கொண்டுள்ளது. ஆகையால் சுற்றுப்புறப் பொருள்கள் இன்னும் சுற்றிக் கொண்டிருப்பதாக அல்லது ஓடிக்கொண்டிருப்பதாகத் தோன்றுகின்றன. ஆயினும் சில விநாடிகளுக்குள் அந்த நீர்ம நெகிழ்பொருள் சமன் அடைந்து சரியாகிவிடுகிறது.