வங்கக் கடலில் உருவானது 'கஜா' புயல்: தமிழகத்துக்கு ஆபத்தா?
வங்கக் கடலில் உருவாக உள்ள புயலுக்கு 'கஜா' என்று பெயரிடப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் அடுத்த 36 மணி நேரத்தில் உருவாக உள்ள புயலுக்கு தாய்லாந்து சார்பில் வழங்கப்பட்ட கஜா என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது. வர்தா புயல் போன்ற தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய புயல் என
கஜா புயல் எதிர்பார்க்கப்படுகிறது.
தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு பகுதி அடுத்த 36 மணி நேரத்தில் புயலாக மாறும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், 'வடக்கு அந்தமான் கடற்கரை பகுதிகளில் தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது.
இது அடுத்த 12 மணி நேரத்தில் வலுப்பெற்று தாழ்வு மண்டலமாக மாறும். மேலும் அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு, வட மேற்கு திசையில் நகர்ந்து புயலாக மாறும்.இந்த புயல் கடலூர் அருகே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கஜா என பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் கடந்த ஆண்டு ஏற்பட்ட வர்தா புயல் அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என கணிக்கப்பட்டுள்ளது.
மேலும் மணிக்கு 30- 50 கிமீ வேகத்தில் காற்று வீசும் என்பதாலும் கடலின் தன்மை கடலூரை ஒட்டியுள்ள பகுதிகளில் மிக கடுமையாக இருக்கும் என்பதாலும் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம்' என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.சென்னை உள்ளிட்ட பல்வேறு கடலோர பகுதிகளில் கஜா புயலின் தாக்கம் இருக்கும் என அஞ்சப்படுகிறது.