அரசு ஊழியர் விடுப்பு : புதிய சலுகைகள் அறிவிப்பு

அரசு ஊழியர்கள் விடுப்பு எடுக்க, சில சலுகைகள் வழங்கி, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.அதன் விபரம்:l சின்னம்மை,
தட்டம்மை, பன்றிக்காய்ச்சல், பிளேக், ரேபிஸ் போன்றவை, தொற்று நோய்களாக கருதப்படுவதால், அவற்றால் பாதிக்கப்படும் அரசு ஊழியர்கள், கூடுதல் நாட்கள், தற்செயல் விடுப்பு எடுக்க, அரசு அனுமதி அளித்துள்ளதுl சின்னம்மை மற்றும் தட்டம்மை பாதிப்புக்கு, ஏழு நாட்கள்; பன்றிக்காய்ச்சலுக்கு, ஏழு முதல், 10 நாட்கள்; பிளேக், ரேபிஸ் போன்றவற்றுக்கு, 10 நாட்கள் வரை, தற்செயல் விடுப்பு எடுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்த விடுப்பை பெற, நகராட்சி, மாநகராட்சி அல்லது மாவட்ட சுகாதார அலுவலர் சான்றிதழ் அளிக்க வேண்டும்l குழந்தையை தத்தெடுக்க அளிக்கப்படும் விடுப்பு, 180 நாட்களிலிருந்து, 270 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளதுl அரசு பணியில் உள்ள பெண்களுக்கு, முதல் பிரசவத்தில், இரட்டை குழந்தைகள் பிறந்தால், அவர்கள் இரண்டாவது பிரசவத்திற்கு, பேறுகால விடுப்பு எடுத்து கொள்ளவும், அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.இவற்றுக்கான அரசாணையை, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை செயலர், ஸ்வர்ணா பிறப்பித்துள்ளார்

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

10th Std English One Mark Question Bank