டாக்டர் படிக்க நீட்... பி.இ முடிக்க எக்ஸிட் தேர்வு !
இந்தியா முழுவதும் மருத்துவ பட்டப்படிப்பு படிப்பதற்கான நீட் நுழைவுத்தேர்வு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அமல்படுத்தப்பட்டு தொடர்ச்சியாக நடந்து வருகிறது. இந்த நிலையில் பிஇ படிப்
பு படிக்கும் மாணவர்களுக்கு இறுதி ஆண்டில் எக்ஸிட் தேர்வு(2019-2020 கல்வி ஆண்டு முதல்) நடத்த AICTE(All Indian Concil for technical Education) முடிவு செய்து இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது.
நாடு முழுவதும் செயல்பட்டு வரும் 3 ஆயிரம் பொறியியல் கல்வி நிறுவனங்களில் ஆண்டுக்கு கிட்டத்தட்ட 7லட்சம் பேர் வரை யுஜி பொறியியல் படிப்பை முடிக்கிறார்கள். இதில் வேறும் 20% - 30% பேருக்கு மட்டுமே படித்த படிப்பிற்கு வேலை கிடைக்கிறது.
வேலை வாய்ப்பு இல்லாத நபர்களின் எண்ணிக்கையானது தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. இதனை தடுக்கவும் தகுதிவாய்ந்த பொறியியல் பட்டதாரிகளை உருவாக்கவே இந்த எக்ஸிட் தேர்வு கொண்டு வரப்படுகிறது. நான்கு ஆண்டுகள் பொறியியல் படிப்பு முடித்த பின்னர் எக்ஸிட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றால் மட்டுமே சான்றிதழ் வழங்கப்படும். இந்த முடிவானது அண்மையில் டில்லியில் நடந்த ஏஐசிடிஇ கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது.
இந்த தேர்வை தேசிய அளவில் ஏஐசிடிஇ நடத்துமா அல்லது பல்கலைக்கழகங்கள் நடத்துமா என்பது இன்னும் தெளிவு படுத்தப்படவில்லை. எக்ஸிட் தேர்வில் தேர்ச்சி பெற்றால் தான் வேலை என்றால் இதற்கு முன்னர் தேர்வு எழுதாமல் வேலைகளில் இருப்பவர்களின் நிலை என்னவாகும் என்று பல கேள்விகள் வரத் தொடங்கி இருக்கிறது. இன்னும் இந்த தேர்வு குறித்து எந்த கல்லூரிகளுக்கும் அதிகாரபூர்வமாக எந்த அறிவிப்பும் அனுப்பப்படவில்லை.