Cell Phone திருட்டை தடுக்க உரிய ஆவணங்கள் இன்றி Reset செய்ய தடை!

'வாடிக்கையாளரிடம் இருந்து அடையாள ஆவணங்கள் பெறாமல்,
மொபைல் போனை 'ரீ-செட்' செய்யக்கூடாது' என, போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.திருப்பூர் மாவட்டத்தில் சிட்டி, ரூரல் போலீஸ் ஸ்டேஷன்களுக்கு உட்பட்ட பகுதிகளில், திருட்டு, வழிப்பறி
உட்பட பல வகையில் மொபைல் போன்கள் திருடப்படுகின்றன.
இது தொடர்பாக வரும் புகார்களுக்கு, சம்பந்தப்பட்ட மொபைல் போனின், ஐ.எம்.ஐ., நம்பர் பெற்று, 'சைபர் கிரைம்' போலீசார் உதவியோடு குற்றப்பிரிவு போலீசார், பறி கொடுக்கப்பட்ட மொபைல் போன்களை கண்டுபிடித்து, பறிமுதல் செய்து சம்பந்தப்பட்டவர்களிடம் ஒப்படைக்கின்றனர்.மொபைல் போன்களை திருடும் ஆசாமிகள், மொபைல் போன் சர்வீஸ் சென்டர்களில் அவைகளை கொடுத்து, 'பாஸ்வேர்டு' மறந்து விட்டதாக கூறி, 'ரீ- செட்' செய்து கொள்கின்றனர். இதன் மூலம், திருட்டு மொபைல் போன், புதியதாக உருமாறி விடுகிறது.
திருடப்படும் மொபைல் போன்களை கண்டுபிடிக்கும் வகையிலும் மொபைல் போன் திருட்டை தவிர்க்கும் நோக்கிலும், திருப்பூர் மாநகர, மாவட்ட போலீசார், திருப்பூர் மாவட்ட செல்லுலர் சங்கத்தினருக்கு சில அறிவுரைகளை வழங்கியுள்ளனர்.
இதுகுறித்து, திருப்பூர் மாவட்ட செல்லுலர் சங்க செயலாளர் அப்துல்லா கூறுகையில்,''பேட்டர்ன் லாக், பாஸ்வேர்டு ரீ-செட் செய்ய வரும் வாடிக்கையாளர்கள், ஆதார் கார்டு உள்ளிட்ட ஏதாவது ஆவணங்களின் நகல் வாங்கிய பின் தான் சரி செய்து கொடுக்க வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தினர். சங்கத்துக்கு உட்பட்ட மொபைல் போன் சர்வீஸ் சென்டர், செகன்ட்ஸ் கடை என, 1,200 கடைகளுக்கு இது தொடர்பான தகவலை தெரியப்படுத்தி, அறிவிப்பு பிரசுரம் ஒட்டியுள்ளோம்,'' என்றார்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)