Today Rasipalan 23.11.2018

மேஷம் இன்று முயற்சியெல்லாம் வெற்றியாகும்.
வாழ்க்கைத்துணையின் உதவி எல்லா வகையிலும் கிடைக்கப் பெறும். குடும்பத்திற்கு இது ஒரு பொற்காலம். கடன்களின் சுமை எதுவும் இல்லாமல் சுபகாரியங்கள் நிறைவேறும். காத்திருக்கும் பெண்கள் வேலை வாய்ப்பையும் நல்ல கணவனையும் ஒருசேரப் பெறுவர். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 6, 9


ரிஷபம் இன்று நோய்களின் தாக்கம் குறையும். வாகனங்கள் நினைத்தபடி ஒத்துழைக்கும். சுற்றமும் உறவும் அலுவலகமும் ஒருசேர நன்மையாகவே இயங்கும். புதிய தொழில்கள் துவங்கும்போது கூட்டு வியாபாரம் பற்றி சிந்திக்காதீர்கள். எதையும் தனியாகவே செய்யுங்கள். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 9  

மிதுனம் இன்று வாழ்க்கைத் துணைக்கு கழுத்துவலி, நரம்புத் தளர்ச்சி போன்ற அறிகுறிகள் காணும். ஏஜென்ட் மூலம் செய்யும் பங்கு, பண பரிவர்த்தனைகள் நஷ்டமடையக் கூடும். இடைத் தரகர்கள் மூலம் அரசு அதிகாரிகளை அணுகுதல் அதிகாரிகளின் கோபத்தை அதிகரிக்கும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 1, 5 

கடகம் இன்று வீட்டுப் பெண்கள் முகச்சுளிப்பு காட்டினாலும் பொறுத்துக் கொள்வதும் எதிர்வாதம் செய்யாதிருப்பதும் நல்லது. அனைத்து காரியங்களிலும் வெற்றியும் பலவழிகளிலும் வருமானமும் வந்து சேரும். நீங்கள் எதிர்பார்த்த மழலை செல்வம் இதோ உங்கள் வீட்டில் தவழப் போகிறது. தொழில்கள் அமைதியாக நல்லவிதமாக நடக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 5, 6  

சிம்மம் இன்று பணத்தை முதலீடுகளாக மாற்ற சிறந்த நாள். சகோதர உதவி பரிபூரணமாகக் கிட்டும். கண் பார்வையில் ஏதேனும் பிரச்னை இருந்தால் உடனே பார்த்துக் கொள்வது நல்லது. கண்ணாடி அணியாமல் வண்டிகளில் செல்லாதீர்கள். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கைகூடும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 2, 7 

கன்னி இன்று புதிய வேலை எதிர்பார்த்திருப்பவர்களுக்கு நல்ல சம்பளத்தில் வேலை கிட்டும். அதர்மமான காரியங்களில் ஈடுபட நேர்ந்தால் முழு மனதுடன் தவிர்த்து விடுங்கள். மாணவர்கள் சோம்பலை உதறிவிட வேண்டும். அதிர்ஷ்ட நிறம்: நீலம் அதிர்ஷ்ட எண்: 2, 9  

துலாம் இன்று அனைத்து செயல்களையும் கவனமாக நடத்தி வரவேண்டும். எல்லாமே மெதுவாகத்தான் நடக்கும். பிரச்னைகள் வந்த வண்ணம்தான் இருக்கும். உள்ளதை உள்ளபடி நகர்த்தி வந்தால் போதும். உத்யோகஸ்தர்களுக்கு அதிகாரிகளின் இடையூறு அதிகரிக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை அதிர்ஷ்ட எண்: 9, 3 

விருச்சிகம் இன்று ஒரு திடீர் கலகத்தால் நீங்கள் மானப் பிரச்னைகளில் மாட்டிக்கொள்ள நேரிடும். ஓர் இடத்தில் கட்டுண்டு கிடக்கும்படியாக ஆகும். மிகுந்த கவனம் தேவை. கூட்டுத் தொழில் புரிவோர் கணக்கு வழக்குகளை பரஸ்பரம் சரிபார்த்து நேர் செய்து கொள்ளுங்கள். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம் அதிர்ஷ்ட எண்: 4, 6  

தனுசு இன்று லாபங்கள் இரட்டிப்பாகும். புதிய செயல்களை இந்தக் காலகட்டத்தில் தள்ளிப் போடக் கூடாது. திட்டமிட்டபடி எல்லா செயல்களும் நிறைவேறும் நாள் இது. ஆனால், செயல்களை நிதானமாக செய்யுங்கள். அதிலும் புதிய செயல்களை இன்றே ஆரம்பித்து விடுங்கள். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்: 5, 6 


மகரம் இன்று ரியல் எஸ்டேட் துறையினர் ஒப்பந்தங்களை முடித்து விடுவது நல்லது. கடும் முயற்சிகளின் பேரில் வேலை கிடைக்கும். அரசு வழி உதவிகள் தடையில்லாமல் கிடைக்கும். குடும்பப் பெண்கள் எண்ணியது கிடைக்கப் பெறுவர். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்: 3, 7  

கும்பம் இன்று வாகன வசதிகளுடன் கிடைக்கப் பெறுவர். முக்கியமானவர்களை நேரே காண்பதும் சன்மானங்கள் பெறுவதும் நடைபெறும். காட்டுப் பகுதிகளுக்கு அரசு சார்பாக செல்ல வேண்டிவரும். வயதானவர்கள் தீர்த்த யாத்திரை செல்வார்கள், மகான்களின் தரிசனமும் கிட்டும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, பச்சை அதிர்ஷ்ட எண்: 1, 7 

மீனம் இன்று சுபவிசேஷங்கள் தாமாக நடக்கும். கவலைப் படாதீர்கள். திருமண வாய்ப்புகள் திடீரென பலிதமாகும். குடும்பப் பெண்களுக்கு தாய்வழி சொத்துகள் லாபமாகும். வங்கிக் கணக்குகளின் இருப்பு அதிகரிக்கும். கூட்டுத் தொழில் புரிபவர்கள் நல்ல லாபம் பெறுவர். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்: 4, 5  

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)