Today School Morning Prayer Activities - 28.11.18

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 28.11.18
திருக்குறள்



அதிகாரம்:செயந்நன்றியறிதல்

திருக்குறள்:106

மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க
துன்பத்துள் துப்பாயார் நட்பு.

விளக்கம்:

குற்றமற்றவரின் உறவை எப்போதும் மறக்கலாகாது: துன்பம் வந்த காலத்தில் உறுதுணையாய் உதவியவர்களின் நட்பை எப்போதும் விடாலாகாது .

பழமொழி

Self help is the best help

தன் கையே தனக்கு உதவி.

இரண்டொழுக்க பண்புகள்

¶ பிறரைக் குறித்து அநாகரீகமான வார்த்தைகளை உபயோகிக்க மாட்டேன் .

¶தினமும் என்னாலான சிறு சிறு உதவிகளை செய்வேன்


 பொன்மொழி

அன்பு மிகுந்த சிறு சொற்கள் கருணை,மிகுந்த சிறு செயல்கள்,இவையே சொர்க்கத்தைப் போல இவ்வுலகை ஒரு மலர்த்தோட்டம் ஆக்குகின்றன.

       - கார்னே

பொதுஅறிவு

1.சீனாவின் தேசிய விளையாட்டு  எது?

 டேபிள் டென்னிஸ்

2. வங்காள தேசத்தின் தேசிய விளையாட்டு எது?

 கபடி

தினம் ஒரு பாரம்பரிய உணவுப் பொருளின் மகத்துவம்

முருங்கைக்காய்





1. முருங்கைக் காய்ச் சாம்பார் சுவையாக இருப்பதோடு அல்லாமல், மலச்சிக்கல், வயிற்றுப் புண், கண்நோய் இவற்றுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது.

2. முருங்கை மரத்தில் பட்டை, கீரை, காய், விதை, பிசின் அனைத்துமே பயன்படுகின்றன.

3. முருங்கை இலைகளில் இரும்பு, தாமிரம், சுண்ணாம்பு சத்து இவை இருக்கின்றன. இந்த இலைகளை நெய்யில் பொரித்துச் சாப்பிட்டால், ரத்த சோகை உள்ளவர்களின் உடம்பில் நல்ல ரத்தம் ஊறும். பல் கெட்டிப்படும். தோல் வியாதிகள் தீரும்.

English words and meaning

Loan.     இரவல்,கடன்
Lintel      மேல் உத்திரம்
Lurk.       ஒழிந்திரு
Listen.    உற்றுகேள்
Lucid.     தெளிவான,
                பிரகாசமான

அறிவியல் விந்தைகள்

மண்புழு

* உழவர்களின் நண்பர்கள் ஆகிய நாங்கள் முதுகெலும்பு இல்லாதவைகளைச் சார்ந்தவர்கள்.
* நாங்கள் 6000 வகை உண்டு.
* எங்களது பெயருக்கு ஏற்ப எங்கள் இருப்பிடம் மண்தான். அந்த மண்ணில் நாங்கள் வளை தோண்டி, அவற்றையே உண்டு அம்மண்ணையே நாங்கள் நல்ல உரமாக்கி வெளியேற்றுகிறோம்.
* எங்களது சுவாச உறுப்பு எங்கள் தோல்தான். எங்கள் உடம்பில் உள்ள சிறப்பு செல்கள் கொழ கொழ என்ற திரவத்தைச் சுறந்து நாங்கள் எப்போதும் ஈரப்பதத்துடன் இருக்க உதவும்

நீதிக்கதை

வனத்துக்கு வந்த வானவில்!

அந்த மலை பச்சையாக நீண்டு சென்றது. உச்சியில் நிமிர்த்திவைத்த ரம்பம்போலச் சிகரங்கள் இருந்தன. கீழே அடிவார வனம், அடர்ந்து விரிந்திருந்தது. தூரத்தில் தூறல் விழுந்து கொண்டிருந்தது. வெயிலும் மெள்ள மறையத் தொடங்கியிருந்தது. சிவகிரி மலைக்கும் அய்யனார் கோயில் மலைக்குமாக வானவில் பளீரெனப் பிரகாசித்தது. சிவப்பு, மஞ்சள், ஆரஞ்சு, ஊதா, நீலம், கருநீலம்,  பச்சை வண்ணங்கள் மேகங்களினூடே ஜாலம் காட்டிக்கொண்டிருந்தன. வனத்தில் விலங்குகள் வானவில்லை ரசித்துக்கொண்டிருந்தன.

யானை ஒன்று அடுத்த யானையை அழைத்தது. ``என்ன அண்ணா கூப்பிட்டீங்க?’’ என்றது.

``தம்பி, நாம் மலை உச்சிக்குப் போய் வானவில்லைத் தூக்கிவந்து, நமது வனத்துக்கு வாசல் வளைவாக வைப்போம். வனம் மேலும் அழகாகும்'' என்றது பெரிய யானை.

``நல்ல யோசனை அண்ணா. இப்பவே போகலாம்’’ என்றதும், இரண்டும் மலைமீது ஏறத்தொடங்கின. மேலே செல்லச் செல்ல, வானவில்லின் அழகு கம்பீரம் கூடிக்கொண்டே செல்வதைப் பார்த்து வியந்தன. அந்த வியப்பில் மேலே ஏறிய களைப்பே தெரியவில்லை.

கொஞ்ச நேரத்தில் வானவில்லை நெருங்கிவிட்டன. தங்கள் தும்பிக்கையால் பிடித்து இழுத்து, முதுகுகளில் தாங்கிக்கொண்டன. இரண்டு யானைகளுக்கும் அவ்வளவு ஊற்சாகம். பாட்டுப் பாடியவாறு தூக்கிவந்து, வனத்தின் நுழைவுவாயில் வளைவாக வைத்தன. அடுத்தடுத்த வனங்களிலிருந்த விலங்குகளும் வேடிக்கை பார்க்கக் கூடி, தமக்குள் பேசிக்கொண்டன. மற்ற வனங்களின் விலங்குகள், ``இது நம் வனத்தில் இருந்தால் நன்றாக இருக்குமல்லவா'' என்று பேசிக்கொண்டன.

அடுத்த வனத்தின் புலி ஒன்று வந்து, ``யானை அண்ணா! இயற்கையான வானவில் அனைவருக்கும் சொந்தமானது. இங்குள்ள மற்ற வனங்களுக்கும் நுழைவாசல் வளைவாக இது இருக்க வேண்டும். ஆகவே, ஒரு நாள் ஒரு வனம் என வைத்துக்கொள்வோம்’’ என்றது.

கரடி ஒன்று வந்தது. ``இல்லை... இல்லை... ஒரு வனத்துக்கு ஒரு வண்ணம் எனப் பிரித்துக்கொள்வோம்’’ என்றது.

``அப்படிச் செய்தால் அழகு குறைந்துவிடுமே’’ என்றது மான்.

``அப்புறம் என்னதான் செய்வது?’’ என்றது மிளா.

``இதைப் பல பகுதிகளாக உடைத்து, ஒவ்வொரு துண்டிலும் ஏழு வண்ணங்கள் வருமாறு எடுத்து, ஒவ்வொரு வனத்திலும் தொங்க விடலாம்’’என்றது நரி.

``மனிதர்கள் உடைப்பதற்கும் அறுப்பதற்கும் கத்தி, ஈட்டி, வாள், அரிவாள், வில் அம்பு, சுத்தியல் என்று வைத்திருப்பார்கள். அப்படி நம்மிடம் என்ன இருக்கு?’’ எனக் கேட்டது கழுகு.

உதட்டில் விரல்வைத்து யோசித்த புலி, ஒரு நீண்ட கம்பை எடுத்து வந்தது.


``நிறுத்துங்கள்... நிறுத்துங்கள்'' என்ற குரல் மேலிருந்து வர, அனைத்து விலங்குகளும் தலையைத் தூக்கிப் பார்த்தன. மரக்கிளையில் தொங்கியவாறு குரங்கு ஒன்று கீழே குதித்தது.

``நண்பர்களே... வானவில்லை உடைக்கவோ, சிதைக்கவோ, பிரிக்கவோ இயலாது. இது இயற்கையின் கொடை. மனிதர்கள், இயற்கையைத் தங்கள் இஷ்டத்துக்கு மாற்றுகிறார்கள். அழகுக்காக, பொழுதுபோக்குக்காக, மன நிம்மதிக்காக என்றெல்லாம் சொல்லிக்கொள்கிறார்கள். அதே தவற்றை நாமும் செய்யலாமா? எந்த ஒன்றும் அதனதன் இடத்தில் இருப்பதுதான் உண்மையான அழகு. அதோடு, அப்படி இருப்பதுதான் இயற்கையின் சமநிலையையும் கட்டுக்குலையாமல் வைத்திருக்கும்'' என்றது.

``யாரடா இவன்? பெரிய ஞானி மாதிரி உபதேசிக்க வந்துவிட்டான்'' என்றபடி குரங்கை அடிக்கப் பாய்ந்தது சிறுத்தை.

சட்டென தடுத்த யானை, ``அவன் சொல்வது சரிதான். நான் இருக்கும் இந்தக் கானகத்தில் மனிதர்கள் நுழையும்போதும், மரங்களை வெட்டும்போதும் நாம் கோபப்படுகிறோம், பாதிக்கப்படுகிறோம் அல்லவா? அப்படித்தான் இதுவும். சொல்பவன் சிறியவன் என்பதால் அலட்சியப்படுத்தக் கூடாது. ஏதோ ஆர்வத்தில் வானவில்லைக்கொண்டுவந்தது நாங்கள் செய்த தவறுதான். மீண்டும் வானிலேயே வைத்துவிடுகிறோம்’’ என்றது பெரிய யானை.

பெரிய யானை சொன்னதை மற்ற விலங்குகளும் ஆமோதித்தன. ``நாங்களும் வருகிறோம். எல்லோருமாக வானவில்லை வழியனுப்பி வைப்போம்'' என்றன.

அனைத்து விலங்குகளும் வானவில்லைத் தூக்கி யானைகளின் முதுகில் வைத்தன. ஆட்டம் பாட்டத்துடன் மலை உச்சிக்குச் சென்று வானில் வீச, மேகங்களுக்கு மத்தியில் மிதந்தவாறு சென்ற வானவில், இவர்களைப் பார்த்துப் புன்னகைத்தது. மேகங்களும் மகிழ்ச்சியாகி மழையைப் பொழிந்தன. சூரியனும் மகிழ்ச்சியாகி இதமாக வெளிச்சம் பரப்பியது.

அந்த மழைச்சாரலிலும் இதமான சூரிய வெளிச்சத்திலும் வானவில் இன்னும் இன்னும் அழகுடன் ஜொலித்தது.

இன்றைய செய்திகள்

28.11.2018

* கஜா புயல் சேதம்: மத்திய குழு 2 நாட்களில் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற கிளை உத்தரவு .

* டிபி மித்ரா (காச நோயாளிகளின் நண்பன்) எனும் புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
காசநோயை அழிக்கும் விதமாகவும், அதுதொடர்பான விழிப்புணர்வு மற்றும் மருத்துவ வசதிகள் குறித்து போதிய வழிகாட்டுதல் வழங்கும் விதமாகவும் இந்த புதிய செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.

* நாசா விண்வெளி மையத்தால் வடிவமைக்கப்பட்ட முதல் ரோபோ விண்கலம் இன்சைட், ஏழு மாதங்களுக்குப் பிறகு செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறங்கிய அடுத்த சில நிமிடங்களிலேயே தான் எடுத்த புகைப்படங்களை நாசாவிற்கு அனுப்பியுள்ளது.

* தேசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் மகளிருக்கான டிராப் பிரிவில் மத்தியப் பிரதேசத்தின் வர்ஷா வர்மன் திங்கள்கிழமை சாம்பியன் பட்டம் வென்றார்.

* சர்வதேச ஹாக்கி சம்மேளனம் (எஃப்ஐஎச்) சார்பில் ஒடிஷா- புவனேசுவரத்தில் 14-வது ஹாக்கி உலகக் கோப்பைப் போட்டிகள் இன்று தொடங்கி டிசம்பர் 16-ம் தேதி வரை நடக்கிறது.

Today's Headlines

🌹Kaja Storm Damage: The Central Board has ordered the High Court branch to file an interim report within 2 days.

🌹TB Mitra (a friend of tuberculosis patients)  new app has been introduced .
This new processor has been designed to help prevent the spread of TB and adequate guidance on awareness and medical facilities.

🌹The first robotic spacecraft insight designed by NASA Space Center has sent photos to NASA with in the  next few minutes after successfully landing on Mars seven months later.

🌹 Varsha Warman of Madhya Pradesh won the championship trophy on Monday  in the National Snooker Championship.

🌹The 14th Hockey World Cup tournament starts on December 16 in Odisha-Bhubaneswar on behalf of the International Hockey Federation (FIH).

Prepared by
Covai women ICT_போதிமரம்

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)