21 ஆண்டுகளுக்கு பிறகு "48-பி' என்ற வெர்டினியன் வால்நட்சத்திரம் வெறும் கண்ணால் பார்க்கலாம்.

"பூமிக்கு அருகாமையில் வரும் வால்நட்சத்திரத்தை தொலைநோக்கியின்றி காணலாம்
கொடைக்கானல் வான் இயற்பியல் மையத்தில் விண்ணில் தெரிந்த வால்நட்சத்திரத்தை ஞாயிற்றுக்கிழமை கணினி மூலமாக பார்வையிடும் ஆராய்ச்சியாளர் செல்வேந்திரன்.

சுமார் 21-ஆண்டுகளுக்கு பிறகு பூமிக்கு அருகாமையில் வரும் வால்நட்சத்திரத்தை பொதுமக்கள் தொலைநோக்கி இல்லாமல் காணலாம் என கொடைக்கானல் அப்சர்வேட்டரியிலுள்ள வான் இயற்பியல் மைய ஆராய்ச்சியாளர் செல்வேந்திரன்  தெரிவித்தார்.

இதுகுறித்து ஞாயிற்றுக்கிழமை அவர் கூறியதாவது:



வான் வெளியில் வால் நட்சத்திரம் அவ்வப்போது நகர்வது வழக்கம். தற்போது "48-பி' என்ற வெர்டினியன் வால்நட்சத்திரம் பூமிப்பாதையில் நகர்கிறது. சுமார் 21 ஆண்டுகளுக்கு பிறகு வடகிழக்கு திசையில் நீலநிற வண்ணத்தில் பூமிக்கு மிக அருகாமையில் வருகிறது.

இந்த அரிய நிகழ்வை இந்தியா முழுவதிலுமிருந்து தொலைநோக்கியின்றி வெறும் கண்ணால் பொதுமக்கள் பார்க்கலாம். இந்த நிகழ்வானது கடந்த டிச. 14-ஆம் தேதி முதல் 17-ஆம் தேதி வரை இரவு 7 மணி முதல் தெரியும்.

இந்த நிகழ்வை பார்க்கும் போது வானம் தெளிவாக இருக்க வேண்டும். அப்போது தான் துல்லியமாக இதனை பார்க்க முடியும். தற்போது உருவாகியுள்ள பெய்ட்டி புயலால் கொடைக்கானலுக்கு எந்தவிதமான பாதிப்பும் இருக்காது. வட மாவட்டங்களில் தான் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றார்

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)