மின் வாரிய உதவி பொறியாளர் டிச., 30ல் தேர்வு அறிவிப்பு

உதவி பொறியாளர்களை நியமனம் செய்வதற்கான, எழுத்து தேர்வை, மின் வாரியம், இம்மாதம், 30ல், நடத்துகிறது.தமிழ்நாடு மின் வாரியத்தில், உதவி பொறியாளர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பதவிகளில், 50 ஆயிரம் காலி பணியிடங்கள் உள்ளன. இதையடுத்து, 'எலக்ட்ரிகல்' பிரிவில்,
300; சிவில் பிரிவில், 25 என, மொத்தம், 325 உதவி பொறியாளர் பதவிக்கு, எழுத்து தேர்வு வாயிலாக, ஆட்களை தேர்வு செய்ய, பிப்., மாதம், 14ல், மின் வாரியம் அறிவிப்பு வெளியிட்டது.


அதற்கு, 79 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர்.பல மாதங்களாகியும், தேர்வு நடத்தாததால், விண்ணப்பித்த பட்டதாரிகள் அதிருப்தி அடைந்தனர். இந்நிலையில், வரும், 30ம் தேதி, உதவி பொறியாளர் பதவிக்கு, மின் வாரியம், எழுத்து தேர்வு நடத்த உள்ளது.இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:முதல் முறையாக, எழுத்து தேர்வில், அதிக மதிப்பெண் எடுக்கப்படும் நபர்களுக்கு, தமிழக அரசின் இட ஒதுக்கீடு அடிப்படையில், வேலை வழங்கப்பட உள்ளது. உதவி பொறியாளர் தேர்வு, அண்ணா பல்கலை வாயிலாக, டிச., 30ல் நடத்தப்படும். இரு வாரங்களில், விடைத்தாள் திருத்தப்படும்.

பொங்கலுக்கு, அதிக மதிப்பெண் எடுத்தவர்களுக்கு, வேலை வழங்கப்பட உள்ளது. இதனால், வேலை வாங்கி தருவதாக ஆசைவார்த்தை கூறும் அரசியல்வாதிகள், இடைத்தரகர்களை நம்பி, பட்டதாரிகள், பணம் கொடுத்து ஏமாற வேண்டும். இளங்கலை இன்ஜினியரிங் பாடங்களை படித்தால், அதிக மதிப்பெண் பெற முடியும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)