பான் கார்டு புதிய 5 விதிகள் இன்று முதல் அதிரடி மாற்றம்
மாற்றம்
பான் கார்டு என்றால் பலரும் பயந்து பின்வாங்கும் நிலை போய், இப்போது பான் கார்டு வாங்கினால் தான் வங்கி வாசலை மிதிக்க முடியும் என்றாகி விட்டது. பான் கார்டுக்கு உரிய விதிகளை வருமான வரித்துறை அடிக்கடி மாற்றி வருகிறது. இப்போதும் முக்கிய மாற்றங்களை செய்துள்ளது. இந்த மாற்றங்கள் இன்று முதல் அமலுக்கு வருகிறது. வருமான வரி செலுத்துவோர் ஒவ்வொருவருக்கும் 10 இலக்க எண் ெகாண்ட பான் கார்டை அளித்துள்ளது வருமான வரித்துறை. ஓராண்டில் 2.5 லட்சம் ரூபாய்க்கு மேல் பணபரிமாற்றம் செய்தால் அதற்கு பான் எண் கட்டாயம். மேலும் வங்கியில் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் டிபாசிட் செய்தாலே இப்போதெல்லாம் பான் கார்டு கேட்பது வழக்கமாகி விட்டது.
புதிய 5 விதிகள்
1 குறிப்பிட்ட காலத்துக்குள் தான் பான் கார்டுக்கு விண்ணப்பிக்க முடியும். அதுபோல, குறிப்பிட்ட காலத்துக்குள் தான் பான் கார்டு வழங்கப்படும். இதற்கான விதிகள் திருத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஆண்டும், ேம மாதம் 31க்குள் விண்ணப்பிக்க வேண்டும். அதற்கு மேல் அனுமதிக்கப்படாது.
2 நிறுவன இயக்குனர், பங்குதாரர், நிர்வாக இயக்குனர், டிரஸ்டி, எழுத்தாளர், நிறுவனர், தலைமை செயல் அதிகாரி, முதன்மை அதிகாரி, நிர்வாகிகள் என்று பொறுப்பில் இருப்பவர்கள் கண்டிப்பாக பான் கார்டு வைத்திருக்க வேண்டும்.
3 மொத்த விற்றுமுதல், விற்பனை, மொத்த வருமானம் ஆகிய இனங்களில் நிதி ஆண்டில் 5 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருந்தாலும், பான் கார்டு முக்கியம்.
4 கணவரை பிரிந்து வாழ்பவரின் பிள்ளைகள் பான்கார்டில் தந்தை பெயரை குறிப்பிட தேவையில்லை.
5 வங்கி கணக்கு துவக்கவோ, வருமான வரி ரிடர்ன் பூர்த்தி செய்யவோ பான் கார்டு எண் கட்டாயம்.