அறிவியல்-அறிவோம்: இருமலும்-இருமல் மருந்து ஆபத்துகளும்.

(S.Harinarayanan GHSS Thachampet)

இருமலும்-இருமல் மருந்து ஆபத்துகளும்.


இருமல் ஒரு நோயல்ல, அது நோயின் அறிகுறி. 
இருமல் என்பது காற்றுப்பாதையை அடைப்பிலிருந்து சுத்தம் செய்வதற்காக ஏற்படும் ஓர்  இயற்கையான பாதுகாப்பு செயலே.

*கிருமிகளாலான சளியோ...

*காற்றின் தூசி, புகை, மற்ற (கெமிக்கல்) வேதியியல் மூலக்கூறுகளால் ஏற்படும் எரிச்சலைக் குறைப்பதற்கோ... 

*காற்றுப் பாதையில் அடைபடும் உணவு போன்ற திடப்பொருட்களை காற்றுப் பாதையிலிருந்து அகற்றுவதற்காகவோ, சுவாசத்தை சீராக்குவதற்காகவோ இருமல் ஏற்படும்.

 ஆஸ்துமாவினால் ஏற்படும் இருமல் சுவாசக்குழாய் மூச்சுக்காற்றை வெளியிடும்போது சுருங்குவதால் ஏற்படும். இவையெல்லாம் சுவாசப் பாதை கோளாறினால் ஏற்படும்.

*இதய நோயினால் நுரையீரலில் நீர் கோர்ப்பதாலும் இருமலும் மூச்சு அடைப்பும் ஏற்படும். இதை இதய ஆஸ்துமா என்பார்கள். இதற்கு இருமல் மருந்துகளைவிட நீரை வெளியேற்றும் மருந்துகளே சிறந்தவையாகும்.

சுவாசப் பாதையில் ஏற்படும் இருமலை, சளி வராத வறட்டு இருமல் (Dry cough), சளியுடன் கூடிய இருமல் (Productive cough) மற்றும் ஆஸ்துமாவினால் காற்றுப் பாதை சுருங்குவதால் ஏற்படும் இருமல் (Allergy, Bronchodilator cough) என அதனதன் காரணங்களில் இருந்தே இருமல் மருந்துகளை, மருத்துவர் ஸ்டெதஸ்கோப்   மூலமாக கேட்டு உறுதிபடுத்தியபின் எழுதித் தருவார்.
 உணவினாலோ, தூசிகளினால் ஏற்படும் அலர்ஜியினாலோ மூக்கிலிருந்து இருமல் உருவாகும். இரண்டாவது வகை இருமல், சைனஸ் அறைகளின் சளியால் ஏற்படும். மூன்றாவது வகை, மூச்சுக்குழல் சுருங்குவதால் சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டு இருமல் உண்டாகும். இதைத்தான் ஆஸ்துமா என்கிறோம். இந்த மூன்று வகைகளைத் தவிர்த்து அரிதாக அசிடிட்டியால் இருமல் வரலாம். சில நேரங்களில் மன நோய்களினால் கூட இருமல் வரும். இதை Psychogenic cough என்று சொல்வோம். இருமல், தும்மல் தொடர்ந்து இருக்கும்.

எந்தப் பரிசோதனை செய்து பார்த்தாலும் உடல்ரீதியாக ஆரோக்கியமாக இருப்பார்கள். இருமல் ஏன் ஏற்படுகிறது என்பதை சாதாரணமாகக் கண்டுபிடிக்க முடியாது. இது மன நலன் சார்ந்து வருவது. அதனால், இருமல் என்பது ஒரு நோயின் வெளிப்பாடு என்பதை உணர்ந்து கொள்ள வேண்டுமே தவிர, இருமல் நின்றால் போதும் என்று தன்னிச்சையாக மருந்து சாப்பிடக் கூடாது’’ 
வறட்டு இருமலாக இருந்தால் அந்த இருமலை நிறுத்தக் கூடிய Suppressant  வகை மருந்தை சாப்பிட வேண்டும், சளி இருமலாக இருந்தால் இருமலை அதிகப்படுத்துகிற Dextromethorphan(DM) மருந்தை சாப்பிட வேண்டும் (அப்போது தான் சளி வெளியேறும்). 

மூன்றா வது வகையில் சளியை இளக்கி சிரமம் இல்லாமல் இருமலை நிறுத்தும் Expectorant மருந்துகள் உள்ளன. உங்களுக்கு ஏற்பட்டிருக்கிற இருமல் என்ன வகை இருமல் என்பதை ஒரு டாக்டரால்தான் கண்டுபிடிக்க முடியும். நுரையீரலில் ஏற்பட்டிருக்கும் நிமோனியா தொற்று, காசநோய், புற்றுநோய் போன்ற நோய்களின் அறிகுறியாகக் கூட இருமல் வெளிப்படும்.’’ 

 இருமல் மருந்தை எப்படிப் பயன்படுத்த வேண்டும்?

‘‘மருந்துகள் ஏற்படுத்துகிற நல்ல விளைவை விட, அதனால் ஏற்படும் பக்க விளைவுகள் சமயங்களில் அதிகம். அதனால், டாக்டர் எந்த அளவுக்கு சாப்பிடச் சொல்கி றாரோ அந்த அளவுக்குத்தான் மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும். இடையில் இருமல் அதிகமாக இருக்கிறது என்பதற்காக நாமாகவே சாப்பிடக் கூடாது. 

தூக்கம் ஏற்படுத்துகிற இருமல் மருந்துகளை டாக்டரின் ஆலோசனை இல்லாமல் சாப்பிடவே கூடாது. சிலர் இந்த வகை இருமல் மருந்துகளை போதைக்காகப் பயன்படுத்துகிறார்கள். இது உடல்நலத்தை மட்டுமல்ல, மனநலனையும் கடுமையாக பாதிக்கும்’’

மூளையில் 
Cough centre என்ற இடத்திலிருந்துதான் இருமல் ஏற்படுகிறது. இருமல் மருந்து இந்த காஃப் சென்டரை அமிழ்த்தி இருமலைத் தடுக்கிறது.மூளைக்குள் நிகழும் ரசாயன மாற்றம் இது என்பதால், இருமல்   மருந்துசாப்பிடுகிறவர் களுக்கு ஒருவித   மயக்கநிலை வரும். குழந்தைகளாக இருந்தால் மருந்து சாப்பிட்டதும் தூங்கிவிடுவார்கள். ஆனால், கொஞ்சம் வளர்ந்த பருவத்துக்கு மேல் இருப்பவர்களுக்கு மெலிதான மயக்கம் வரும். இது, ஆல்கஹால் பயன்படுத்தியதுபோல் தூக்கமும் இல்லாமல், விழிப்பும் இல்லாமல் போதையான நிலையை ஏற்படுத்தும். இருமல் மருந்தில் வலியைத் தாங்கிக் கொள்வதற்காக சேர்க்கப்படும் ‘கொடின்’ என்ற வேதிப் பொருளே இந்த மனநிலையைக் கொடுக்கிறது. 

இருமல் மருந்துகளை கடைகளில் வாங்கி எடுத்துக் கொள்வதன் மூலம் சுவாசக்குழாய் நோய்களை காய்ச்சலாக்கி கஞ்சி குடிக்க   வைக்கும். அவை நோய்களை குணமாக்கு வதற்கு பதில் மோசமாக்கி மருத்துவரை நாடும் காலத்தை தாமதமாக்க மட்டுமே பயன்படும். இருமல் மருந்துகள் (bromhexine ambroxol carbocisteine acetylcysteine), சளியை வெளியேற்றும்  மருந்துகள் (codeine dextromethorphan), மூளையில் இருமல் மையத்தை இரும விடாமல் தடுக்கும் மருந்துகள் (Chlorpheniramine, Diphenhydramine, promethazine, Phenergan), அலர்ஜியை குறைக்கும் மருந்துகள் ஆகியவை ஓரளவுக்கு குமட்டல், வாந்தி, வயிறு உப்புசம், பேதி போன்ற இரைப்பை, உணவுக்குழாய் பக்கவிளைவுகளையும், தோலில் அரிப்பு, தோலில் மாற்றங்கள் ஏற்படுத்தவும் வாய்ப்பு உள்ளது. 
ஆஸ்துமாவுக்காகத் தரப்படும் இருமல் மருந்துகளை (Salbutamol, Terbutaline,   Etophylline) சுவாசப்பாதை நுரையீரலில் காற்றுக்குழாய்களை   விரிக்கச் செய்யும் மருந்துகள் (bronchodilator) அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொண்டால் இதயத் துடிப்பை அதிகப்படுத்தும்... மூளையைப் பாதிக்கும்.   சில கிருமி மருந்துகளின் வேலையைப் பார்க்கும். 

அதனால், குறிப்பிட்ட அளவு இருமல் மருந்தை மட்டும் அந்த அந்த வேளைக்கு எடுத்துக்கொள்ளவும். ACE Inhibitor  (Enalapril, Ramipril) என்கிற ரத்தக் கொதிப்பு மாத்திரை சிலருக்கு இருமலை வரவழைக்கலாம். பராமரிக்கப்படாத தூசி நிறைந்த சாலைகள், புகை வெளியிடும் வாகனங்கள், தொழிற்சாலைகள், குறிப்பாக கட்டிடம் கட்டும் இடங்கள், சுற்றி இருக்கும் அனைவருக்கும் வரவழைக்கும் இருமலை eosinophilic bronchitis என்ற ஆஸ்துமா போன்ற இருமலை வரவழைக்கும்.

இதுவே வயிற்றுப்புழுக்களாலும் (worms) வரலாம். அதிக நெடியுடைய பெர்ஃப்யூம் இருமலை வரவழைக்கும். மிகுந்த எண்ணெய் கலந்து வறுக்கப்பட்ட உணவு, இரவில் தூக்கத்தில் நெஞ்சு கரித்தலையும் இருமலையும் தூண்டும் (Gerd).இருமலை சாதாரணமாக எடுத்துக்கொள்ளாமல் குணமாகும் வரை மருத்துவரை பார்ப்பது அவசியம்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)