அறிவியல்-அறிவோம்: பாம்பின் விஷம் அறிவோம்; கடித்தது விஷமுள்ள பாம்பா எப்படி அறிவது??

அறிவியல்-அறிவோம்: பாம்பின் விஷம் அறிவோம்

எல்லாப் பிராணிகளுக்கும் மனிதர்களுக்கும் உடம்பில் அமினோ அமிலம்(Amino acid) என்கிற ஒரு விஷயம் உண்டு. இந்த அமினோ அமிலத்தில் ‘எஸ்.எஸ்’(S-S) என்று சொல்லப்படும் சல்பர் பை சல்பர் ஒரு ஸ்பெஷல் ரசாயனம். இந்த சல்பர் பை சல்பர் ஒரு ரசாயனச் சங்கிலி.
இந்தச் சங்கிலி எல்லா உயிர்களிடத்திலும் ஒற்றையாய் இருக்கும். ஆனால், பாம்புக்கு மட்டும் இரண்டு சல்பர் - பை - சல்பர் சங்கிலிகள். இந்தச் சங்கிலிகளின் அமைப்பில்தான் பாம்பின் விஷ ஃபார்முலா அடங்கியுள்ளது.

ஒவ்வொரு பாம்புக்கும் ஒவ்வொரு விதமான விஷம். நாகப்பாம்பிடம் சுரக்கும் விஷத்துக்கு 'கோப்ரா டாக்ஸின்' என்று பெயர். கட்டுவிரியன் பாம்பிடம் உள்ள விஷத்துக்கு 'சியாமென்ஸிஸ் என்று பெயர். கருநாகப் பாம்பின் விஷம் கார்ல் டாக்ஸின் என்று அழைக்கப்படுகிறது. இதில் கட்டுவிரியன் பாம்பின் விஷமான 'சியாமென்ஸிஸ் மிகவும் கடுமையானது. பாம்பிடம் கடிபட்டவர்களை உரிய நேரத்துக்குள் மருத்துவமனைக்குக் கொண்டுபோய்விட்டால் காப்பாற்றிவிடலாம். அந்த உயிர்காக்கும் மருந்தின் பெயர் ஆன்டிவெனின் ‘க்ரோடாலிடேட் பாலிவேலன்ட்’ (Antivenin ‘Crotalidate’ Polyvalent) போன்ற சில குறிப்பிட்ட மருந்துகளைச் சொல்லாம்.பாம்பின் விஷக்கடிக்கு அட்ரோபைன் என்னும் இன்னொரு தாவர விஷம் மருந்தாக தரப்படுகிறது!, விஷமுறிவுக்கு பரவலாக அறியப்பட்ட மருந்து அட்ரோபைன்!



பாம்பு விஷம் எப்படி உடலை பாதிக்கும்? எல்லா பாம்பு கடிகளுக்கும் "Anti Venum Serum" என்ற ஒரே மருந்து தான் . ஆனால் ஒவ்வொரு பாம்பு ஒவ்வொரு உறுப்பை பாதிக்கும் , சில சமையம் பாதிக்காமலும் இருக்கலாம். உதாரணத்திற்க்கு நல்ல பாம்பின் விஷம் மூளையையும் நரம்புகளையும் பிரதானமாக பாதிக்கும் , Viper பாம்புகள் இரத்த ஓட்டத்தையும் சிறுநீரகத்தையும் முதலில் பாதிக்கும் . சில பாம்களுக்குள் விஷம் இருக்காது (பச்சை பாம்பு) , அதனால் அவர்களுக்கு "Anti venom Serum" தேவைப்படாது . பாம்பு கடித்தவுடன் உடலுக்குள் செலுத்தப்படும் விஷம் ரத்தவோட்டத்தையும் நரம்பு மண்டலத்தையும் தாக்கி உயிரிழப்பு ஏற்படக் காரணமாகிறது. பாம்பு மனிதர்களை கடித்து விஷத்தைச் செலுத்தியவுடன் அது இரண்டு வகைகளில் மனிதர்களின் உடலைத் தாக்கும்.கடித்த பாம்புகளுக்கேற்ப விஷக்கடிக்கு சிகிச்சை அளிக்கப்படும். விஷத்தில் இரண்டு வகை. ஒன்று, நியூரோடாக்ஸின் (Neurotoxin) என்ற விஷம். இது நரம்பு மண்டலத்தை பாதிக்கும். மிகவும் ஆபத்தானது. ராஜநாகம், நல்ல பாம்பு போன்ற பாம்புகள் கடிப்பதால் இந்த வகை விஷம் உடலில் ஏறும். அரை மணி நேரத்தில் விஷமுறிவு மருந்து கொடுத்துவிட்டால், கடிபட்டவரின் உயிரைக் காப்பாற்றிவிடலாம். மற்றொன்று, ஹீமோடாக்ஸின் (Hemotoxin) என்ற விஷம். இது, ரத்த செல்களைப் பாதித்து ரத்த உறைதலைத் தடுக்கும் அல்லது ரத்த சிவப்பணுக்களை அழித்துவிடும். கட்டுவிரியன் கண்ணாடிவிரியன், சாரைப்பாம்பு போன்ற பாம்புகள் கடித்தால் இந்த பாதிப்புகள் ஏற்படும்."

பாம்பு கடித்தால் பயமோ, பதற்றமோ அடையாமல் இருந்தால் விஷம் வேகமாக ரத்தத்தில் பரவாது. கடித்ததும் ஓடக்கூடாது. அப்படி செய்தால் விஷம் வேகமாக உடலில் பரவும். இந்தியா முழுவதும் 302 பாம்புகள் வகையாக உள்ளன. அவற்றுள் நாகப்பாம்பு, கட்டு விரியன், கண்ணாடி விரியன், சுருட்டை விரியன், சட்டி தலையன் ஆகிய வகை பாம்புகள் தான் விஷம் உள்ளவை. சாரைப்பாம்பு உள்பட 282 வகை பாம்புகள் விஷமற்றவை. பாம்பு கடிக்கான மருந்து உலகிலேயே பாம்புக் கடியால் அதிகம்பேர் உயிர் இழப்பது இந்தியாவில்தான். தமிழகத்திலும் பாம்புக் கடியால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பாம்புக் கடிக்கான மருந்து தட்டுப்பாடே இதற்கு காரணம் எனக் கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது சென்னையில் உள்ள கிங் இன்ஸ்டிட்யூட் இதற்கான மருந்து தயாரிப்பில் புதிய வழியைத் தொடங்கி உள்ளது. அதுவும் குதிரையின் மூலம்.


பாம்பின் விஷத்தை சேகரித்து ஒன்றாக கலந்து குதிரையின் உடலில் செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்தப்பட்டிருக்கும் விஷத்துக்கு எதிர் மருந்தை (Antibodies) குதிரையின் உடல் தானாகவே உற்பத்தி செய்துகொள்ளும். விஷ முறிவு (Anti-venom) திரவம் குதிரையின் உடலில் உற்பத்தி செய்யப்பட்டவுடன் குதிரையின் எடையில் ஒரு சதவிகிதம் என்ற கணக்கில் ரத்தம் எடுக்கப்படும். இந்த ரத்தத்தைப் பகுப்பாய்வு செய்து விஷத்தை முறிக்கும் மருந்து பலகட்ட ஆய்வுக்குப் பின்னர் தயாரிக்கப்படும். விஷ முறிவு திரவம் பிரித்தெடுக்கப்பட்ட பின் ரத்தம் குதிரையின் உடலில் உடனடியாக செலுத்தப்பட்டுவிடும். எனவே, குதிரைக்கு எந்த வகையிலும் ரத்த இழப்பு ஏற்படாது. உலக அளவில் எல்லா இடங்களிலும் விஷமுறிவு மருந்து தயாரிக்க இந்த முறைதான் பின்பற்றப்படுகிறது’’

கடித்தது விஷமுள்ள பாம்பா என்பதை எப்படி அறிவது? பாம்புகள் கடித்து விட்டால் அதன் கடிவாயை பார்த்ததும், விஷப்பாம்பா? விஷம் இல்லாத பாம்பா? என்பதை கண்டு பிடித்து விடலாம். கடிபட்ட இடத்தில் நிறைய பல் வரிசைகள் தென்பட்டால் அவை விஷமில்லாத பாம்புகள். விஷமுள்ள பாம்பு களுக்கு இரண்டு பற்களின் தடங்கள் அழுத்தமாக பதிவாகும். இரைப்பற்களின் தடமும் பதிவாகி இருக்கும். அதனால் அதில் இருந்து ரத்தம் வரும். விஷம் உள்ள பாம்புகள் கடிக்கும்போது, உடனே வீக்கம், தலை சுற்றல், வாந்தி, மயக்கம் ஏற்படும்’’

பாம்புகள் பற்றிய மூட நம்பிக்கைகள் பாம்புகள் நாகமாணிக்கத்தை கக்கிவிட்டு இரைதேடும் என்பது மூடநம்பிக்கை. அவற்றின் ஆயுட்காலம் 14 ஆண்டுகள். பாம்புகளுக்கு காதுகள் கிடையாது. மகுடி ஊதினால் மயங்காது. ஆனால் அதிர்வுகளை உணர்ந்து கொள்ளும். அதன் கண்கள் 90 டிகிரி பார்வை கோணத்தில் சுழலும். நம்முடைய ஒவ்வொரு அசைவையும் உன்னிப்பாக கவனிக்கும் ஆற்றல் கொண்டது.


பாம்புகள் வீட்டருகில் வராமல் இருக்க. ஆடு தீண்டாப்பாளை, நாகதாளிக் கிழங்கு, ஆகாச கருடன் கிழங்கு, சிறியா நங்கை, இம் மூலிகைகளை வீட்டில் வளர்த்து வந்தால் இதன் வாசனைக்கு விஷ ஜந்துக்கள், பாம்புகளை நெருங்க விடாது,மேலும் பூண்டு கரைசல் தெளித்தாலும், புதினா வாசனைக்கும் பாம்புகள் வராது.

தங்கத்தை விட மதிப்பானது விஷம்: வன உயிரின பாதுகாப்பு சட்டம் 1972ன் படி பாம்புகள் அனைத்தும் சட்டப்பூர்வமாக பாதுகாக்கப்பட்டுள்ளன. அரசின் அனுமதி மற்றும் உரிமம் இல்லாமல் அவற்றை பிடித்தலோ, அடித்து கொன்றாலோ அல்லது ஒரு இடத்தில் இருந்து வேறு இடத்திற்கு கொண்டு சென்றாலோ அதிகபட்சமாக மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். ஏனெனில் பாம்புகள் தங்கத்தை விட விலை மதிப்பு மிக்கது. அவைகள் மனிதர்களுக்கு பெரும் உதவிகளை செய்து வருகின்றன. பாம்பு விஷம் மருத்துவ துறையில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஒரு கிராம் நல்லபாம்பு விஷம் 28 ஆயிரம் ரூபாய்; கட்டுவிரியன் விஷம் 30 ஆயிரம் ரூபாய்; கண்ணாடி விரியன் விஷம்40 ஆயிரம் ரூபாய், சுருட்டை விரியன் 45 ஆயிரம் ரூபாய் என விற்பனை செய்யப்படுகின்றன.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

Class 6th English Learning Outcomes Chapter-1

6,7,8,9,10 Std English Notes of Lesson Collection 2022