அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆசிரியரல்லாதோருக்கு சிக்கல்
அரசு உதவிபெறும் பள்ளிகளில் உபரி பணியாளர்களை பணி நிரவல் செய்ய கல்வித்துறை உத்தரவிட்டுள்ளதால் சிக்கல்ஏற்பட்டுள்ளது.நிதிநிலைமையை காரணம் காட்டி, உதவிபெறும் பள்ளிகளில் ஆசிரியரல்லாத பணியிடங்களுக்கு அனுமதி வழங்க அரசு மறுத்து வந்தது.
பள்ளி நிர்வாகிகள் தொடர்ந்த வழக்கில் அப்பணியிடங்களை மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் நிரப்ப அரசு உத்தரவிட்டது.ஏற்கனவே 250 முதல் ஆயிரம் மாணவர்களுக்கு ஒரு எழுத்தர், ஆயிரம் முதல் 1,500 வரை 2 பேர், 1,500 க்கும் மேல் 3 பேரை நியமிக்கலாம்.ஆயிரம் மாணவர்கள் வரை ஒரு அலுவலகஉதவியாளர், ஆயிரம் முதல் 1,500 வரை 2 பேர், 1,500 க்கு மேல் 3 பேர் நியமிக்கலாம்.
எத்தனை மாணவர்கள் இருந்தாலும் ஒரு அலுவலக வேலையாள், காவலர் நியமிக்கலாம்.தற்போது அது மாற்றப்பட்டு 251 முதல் ஆயிரம் மாணவர்கள் வரை தலா ஒரு அலுவலக உதவியாளர் மற்றும் இளநிலை உதவியாளர் (அ) உதவியாளர் (அ) பதிவுருஎழுத்தர், 1001 க்கு மேல் 2 பேர் இருக்கலாம்.எத்தனை மாணவர்கள் இருந்தாலும் ஒரு காவலர் இருக்கலாம்.மேலும் 1991-92 ல் அனுமதித்த பள்ளிகளில் மட்டுமே ஆய்வக உதவியாளர் நியமிக்க முடியும். சுத்தம் செய்வோர், அலுவலக வேலையாளர்,துப்புரவாளர் பணியிடங்களை நிரப்பவும் அனுமதி வழங்கவில்லை.
புதிய உத்தரவுப்படி கணக்கெடுக்கும்போது பள்ளிகளில் கூடுதல் பணியாளர்கள் இருந்தால் பணி நிரவல் மூலம் மாவட்டத்திற்குள்ளோ, வேறு மாவட்டங்களுக்கோ மாற்றம் செய்ய வேண்டுமென, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.இதனால் ஆசிரியரல் லாத பணியாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்