அறிவியல்-அறிவோம்: நோய்களை வரவேற்கும் "மைக்ரோவேவ் ஓவன்" சமையல்
சீ.ஹரிநாராயணன்.
Ghss, தச்சம்பட்டு)
அறிவியல் வளர்ச்சி,நாகரிக வளர்ச்சி என்று சொல்லி நோய்களை வரவேற்றுகொண்டிருக்கிறோம்,அதில் ஒன்றுதான் மைக்ரோவேவ் ஓவன் சமையல்.
மைக்ரோவேவ் ஓவன் செயல்படுவதற்கு அடிப்படையே, அதிலிருந்து வெளிப்படும் `மைக்ரோவேவ் அலை’ எனப்படும் ஒருவகை மின் காந்த அலைகள்தாம். பொதுவாக மின் காந்த அலைகள், டி.வி., ரேடியோ போன்றவற்றின் ஒலி, ஒளிபரப்புக்காகவும், டெலிகம்யூனிகேஷனுக்காகவும் (மொபைல்போன்) பயன்படுத்தப்படுபவை. `ஓவனில்’ இருக்கும் மேக்னெட்ரான் (Magnetron) எனப்படும் எலெக்ட்ரானிக் ட்யூப்தான், மைக்ரோவேவ் அலைகளை உற்பத்தி செய்கிறது. ஓவன்களில், மின் - காந்த அலை, ஒரு மெலிந்த குழாய் வழியே செல்லும் போது, வைக்கப்பட்டிருக்கும் உணவுப் பொருள் மீது, மாறுதிசை மின்னோட்ட இயல்புடன் விழுகிறது. மாறுதிசை மின்னோட்டத்தின் இயல்பே, ஒரு மூலக்கூறில் உள்ள நேர் - எதிர் துருவங்களை, மாற்றி அமைப்பது தான். இதனால், மைக்ரோவேவ் ஓவனில் வைக்கப்படும் உணவுப் பொருளில் உள்ள ஒவ்வொரு மூ லக்கூறும், நேர் திசை - எதிர்திசை சுழற்சிக்கு உட்படுகிறது. ஒரு நொடிக்கு, குறைந்தபட்சம் 2,000 முறை, மூ லக்கூறுகள், சுழற்சிக்கு உட்படுகின்றன.
சுழற்சியின் போது மூலக்கூறுகள் ஒன்றின் மேல் ஒன்று மோதி, உணவில் சூட்டை ஏற்படுத்துகிறது. இந்த துருவ மாற்றம் மற்றும் மோதலால், உணவுப் பொருளின் மூலக்கூறு அமைப்பே மாறுபட்டு விடுகிறது.
அதாவது, நமக்கு “ஷாக்’ அடித்தால் உடலுக்கு என்ன ஆகுமோ, அதை போல் தான் உணவுக்கும் “மைக்ரோவேவ் ஒவனில்’ நடக்கிறது. இந்த உணவைச் சாப்பிடுவோர் உடலில் பல பாதிப்புகள் ஏற்படும்.
சமைக்கும்போது ரேடியேஷன் வெளியே வந்துகொண்டிருக்கும். அவை சருமத்தில் பட்டால், சரும பாதிப்புகள் ஏற்படலாம். எனவே, `ஒவன்' செயல்பட்டுக்கொண்டிருக்கும்போது, அதனருகில் இருக்க வேண்டாம். முடிந்தவரை சற்றுத் தள்ளியே இருக்கவேண்டும்.
சமையலின்போதும், சமையலை முடித்த பிறகும், சிலர் குனிந்து கையால் உள்ளிருக்கும் பாத்திரத்தை வெளியே எடுப்பார்கள். அந்தச் சமயத்தில் வெளியேறும் கதிர்கள், சருமத்தைப் பாதிக்கக்கூடும். குனிந்து எடுக்கும்போது முகத்தில் அவை பட்டால், கண் பாதிப்புக்கூட ஏற்படலாம். எனவே, பக்கவாட்டில் நின்று கிளவுஸ் அணிந்து மைக்ரோவேவ் ஒவனை ஆபரேட் செய்யவேண்டும்.
சூரியனிடமிருந்து கூட, மின்காந்த அலைகள் வெளிப்படுகின்றன. அவை பாதிப்பு ஏற்படுத்துவதாக யாரும் கூறவில்லையே?’ என, நீங்கள் கேட்கலாம். அவை, நேரடி மின்னோட்ட இயல்புடன், பூமியின் பரந்த பரப்பளவை அடைகின்றன. இதனால், பூமியில் காணப்படும், உயிருள்ள - உயிரற்ற எந்தப் பொருளுக்கும் பாதிப்பு ஏற்படுவதில்லை.
அமெரிக்கா, ஓரிகான் மாகாணத்தில், அட்லாண்டிஸ் ரைஸிங் எஷுகேஷனல் செண்டர் என்ற மையம், ரஷ்ய ஆராய்ச்சிக் கட்டுரை ஒன்றை வெளியிட்டது. அதில் இந்த மைக்ரோவேவ் ஓவன் பயன்பாடு குறித்து வெளியிட்டுள்ள தகவல்கள் அதிர்ச்சி அளிக்கக்கூடியது.
அதன்படி:
* ரத்தத்தில் ஹீமோகுளோபன் அளவு குறைகிறது.
* உடலுக்கு நன்மை விளைவிக்கும் எச்.டி. எல்., கொழுப்பு குறைகிறது.
* ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களின் அளவு அதிகரி க்கிறது.
* நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கும், ரத்த வெள்ளை அணுவில் காணப்படும், “லிம் போஸைட்’ குறைகிறது.
* ரேடியோ கதிர்கள் ஊடுருவிய உணவுப் பொருட்களைச் சாப்பட நேர்கிறது. இதனால் புற்றுநோய் ஆபத்து ஏற்படுகிறது.
* உணவுப் பொருட்களின் சத்து குறைகிறது. மாறுபட்ட மூலக்கூறுகளுக்கு நம் உடல் பரிச்சயப்படாததால், அவற்றை ஜீரணிக்க முடியாமல், அவை உடலிலேயே தங்குகின்றன. இதனால், உடலில் பல்வேறு உபாதைகள் ஏற்படுகின்றன.
* ஆண்/ பெண் ஹார்மோன் உற்பத்தி குறைகிறது.
* வயிறு, குடல் புற்றுநோய் உருவாகிறது. ரத்தத்தில் புற்றுநோய் செல்கள் வளர வழி வகுக்கிறது.
* உடலின் முக்கிய சுரப்பகள் செயலிழக்கின்றன. இதனால், நோய் எதிர்ப்புத் திறன் குறைகிறது. நினைவுத் திறன், கவனம், வலிமை, சாதுர்யம் ஆகியவை குறைகின்றன.
மைக்ரோவேவ் ஒவனில் சூடாக்கப்படும் பால் பாதிப்படைகிறது .குறிப்பாக பாக்டீரியா தொற்றிலிருந்து பாலை பாதுகாக்க பாலில் உள்ள lysozyme என்ற பொருள். இது முற்றிலும் சிதையும்.
மைக்ரோவேவால் அழிக்கப்படும் மற்றொரு ஊட்டசத்து விட்டமின் B-12 என 1998 ல் ஜப்பனிய அறிவியல் ஆராய்ச்சி செய்திகளில் வெளியான தகவல்.
"குழந்தைகளுக்கான் உணவுகள் மைக்ரோவேவுக்கு உட்படுவதால் அதிலுள்ள சில trans-amino acid கள் trans-fatty acid போன்ற செயற்கைப் பொருளாக மாறுகின்றன. அதிலும் L-proline என்ற ஒரு அமினோ அமிலம் நரம்பு மண்டலத்தையும் சிறுநீரகத்தையும் பாதிக்கும் ஒரு வகை விஷப்பொருளாக மாறுகிறது."1989 ல் வெளியான Lancet மருத்துவ சஞ்சிகையில் Dr. Lita Lee இவ்வாறு எழுதியிருக்கிறார்.
மண்பாண்டங்களில் சமைக்கும் சமையலே என்றும் எப்போதும் உடலுக்கு நன்மை செய்யும் என்பதை நினைவில்கொள்வோம்,நம் முன்னோர் வழியை உடல்நலம் காக்க கடைபிடிப்போம், பாதுகாப்போம் நோயின்றி வாழ்வோம்.