ஜான்சன் அண்ட் ஜான்சனின் குழந்தைகள் பவுடரில் புற்றுநோய் உண்டாக்கும் துகள்கள்
கடந்த சில மணிநேரங்களில் நிகழ்ந்த சில முக்கிய உலக நிகழ்வுகளைத் தொகுத்து வழங்குகிறோம்.
குழந்தைகள் பவுடரில் புற்றுநோய் உண்டாக்கும் துகள்கள்
ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தயாரிக்கும் குழந்தைகளுக்கான முகப்பவுடர்களில் புற்றுநோயை உண்டாக்கும் ஆஸ்பெஸ்டாஸ் துகள்கள் இருப்பது குறைந்தது 1971 முதலே தெரியும் என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்ட பின் அதன் பங்கு மதிப்புகள் 10% அளவுக்கு சரிந்துள்ளன.
புற்றுநோய் உண்டானதாக அந்நிறுவனம் மீது ஆயிரக்கணக்கான வழக்குகள் நிலுவையில் உள்ளன. ராய்ட்டர்ஸ் செய்தி ஒருதலைப்பட்சமானது என ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் கூறியுள்ளது.