#அறிவியல்-அறிவோம்: பேட்டரி எவ்வாறு செயல்படுகிறது?

(S.Harinarayanan,
Ghss, Thachampet.)
  


பேட்டரி என்பது மின்சாரத்தை அப்படியே வாங்கி சேமித்து திரும்ப தரும் ஒரு பொருளல்ல. அதனுள் அடங்கி இருக்கும் பொருட்களின் வேதியியல் மாற்றங்களினால் ஏற்படும் வினை தான் நமக்கு அந்த மின் சக்தியை பெற்றுத்தருகிறது.

நாம் அன்றாடம் டார்ச் லைட் போன்றவற்றில் உபயோகப்படுத்தும் ட்ரை செல்லின் அமைப்பை பார்க்கலாம்.

Dry cell எனப்படும் இந்த உலர்ந்த மின்கலம் மூன்று பாகங்களை கொண்டுள்ளது.

1.ஜிங்க் தகட்டினால ஆன மேற்பகுதி உறை,
2.நடுவில் அமைந்துள்ள கரிகட்டை (காரீயம்) குச்சி அவை இரண்டிற்கும் இடையில் நிரப்பப்பட்டு இருக்கும்  3.எலக்ட்ரோலைட் பேஸ்ட் அல்லது பசை.(மின்பகுபொருள்)


பேட்டரின் மேற்பதியில் கரிக்கட்டையின் ஒரு முனையில் உலோகத்தினால் ஆன தொப்பி போன்ற வடிவில் இணைக்கப்பட்டு உள்ள முனை + பாஸிடிவ் பாய்ண்ட் என குறியிடப்படுகிறது, பேட்டரியின் அடிப்பாகம் – நெகடிவ் பாய்ண்ட்  என குறியிடப்படுகிறது.

பேட்டரியுடன் லோட் இணைக்கப்படும் போது, உதாரணத்திற்கு ஒரு பல்பை பேட்டரியுடன் இணைக்கும்போது, ஜிங்க் தகடு மற்றும் எலக்ட்ரோலைட் பேஸ்ட் வேதி வினையால் உந்தப்பட்டு எலெக்ட்ரான்கள் கரிக்குச்சி மூலம் வெளியேறுகிறது இத்ன் காரணமாக       மின்னோட்டம் ஏற்ப்பட்டு பல்ப் எரிகிறது.

தொடர்ச்சியாக இது நடைபெறும் பட்சத்தில் வெளி உறையான ஜிங்க் தகடு தனது சக்தியை இழந்து உருக்குழைய ஆரம்பத்திவிடுகிறது. அதன் பிறகு அது பயனற்றதாக ஆகிவிடுகிறது. இதுதான் சாதாரன ட்ரை செல்லின் நிலை.
                                                                                                                                                             தற்காலத்தில் ஆல்காலைன் பேட்டரி என்று வருகின்றன அவை சாதாரண பேட்டரியிலிருந்து சிறிதளவு மாறுபடுகிறது. இவை சாதாரண பேட்டரியை விட விலையில் அதிகம். அதற்கு தகுந்தாற்போல் உழைப்பும் அதிகம்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

10th Std English One Mark Question Bank