#அறிவியல் அறிவோம்: கண்கள் துடிப்பது ஏன்? எப்படி?

(S.Harinarayanan, GHSS Thachampet)

கண்கள் துடிப்பதனை மயோகீமியா (Mayokimiya) என மருத்துவ துறையில் அழைப்பர்.கண்களின் மெல்லிய நரம்புகள், தசைகள் தொடர்ந்து பாதிக்கப்படுவதாலேயே இந்நோய் நிலைமை ஏற்படும்.


கண்களின் இமைப்பகுதி, வெளிப்புற நரம்பு மண்டலம், உடலில் செல்லும் மின்னோட்டம், மின்னணுக்கள் ஆகியவை ஒன்றோடு ஒன்று இணைந்துள்ளன. இந்த இணைப்பில் மிக நுண்ணிய மாற்றங்கள் ஏற்படுவது சகஜம். ரத்த ஓட்டம் எப்படிச் சீராகச் செல்லுமோ அதுபோல, உடலுக்குத் தேவையான மின்னோட்டமும் அனைத்து உறுப்புகளுக்கும் சீராகச் சென்றுகொண்டிருக்கும். இதில் வெளிப்புற நரம்பு மண்டலத்தில் செல்லும் நரம்புகளுக்குச் செல்ல வேண்டிய மின்னணுக்களில் (Electrons) மிக நுண்ணிய மாற்றம் ஏற்படும்போது, கண் இமைகள் துடிக்கும். சில சமயங்களில், ஐந்து நிமிடங்களோ, பத்து நிமிடங்களோ கண் இமைகள் துடித்துவிட்டு நின்றுவிடும். சிலருக்கு இடை இடையே கண் தொடர்ந்து துடித்துக்கொண்டேயிருக்கும். இதற்கு பயப்படத் தேவை இல்லை.

வைட்டமின் சி மற்றும் வைட்டமின் பி12 குறைபாடு இருந்தால் உடலில் தசைகள் சுருங்க ஆரம்பிக்கும். அப்போது கண் தசைகளும் சுருங்கும். அதனாலும் கண்கள் அடிக்கடி துடிக்க ஆரம்பிக்கும்.சோடா, ஆல்கஹால் ஆகியவற்றை முற்றிலும் தவிர்த்துவிடுதல் வேண்டும். காபி, ஆல்கஹால் ஆகியவற்றை அதிகமாக எடுத்துக் கொண்டாலும் கண்கள் அடிக்கடி துடிக்கும்.உடலுக்குத் தேவையான அளவு தண்ணீர் குடிக்காமல் இருந்தாலோ கண்கள் வறட்சியடையும். உங்கள் கண் வறட்சி அடைந்திருப்பதற்கான அறிகுறியை வெளிப்படுத்தும் முறைகளில் ஒன்று தான் உங்கள் கண் துடிப்பது.தூக்கமின்மை மற்றும் நாள் முழுவதும் கணினியில் உட்கார்ந்து வேலை செய்வதும் இதற்கு ஒரு காரணம் என்று கூறப்படுகிறது.நீங்கள் அதிகப்படியான மன அழுத்தத்துக்கு ஆளாகியிருந்தால் அடிக்கடி கண்கள் துடிக்கும். மன அழுத்தத்தைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபடுவது நல்லது.கண்கள் துடிப்பது பற்றிய பல்வேறு மூட நம்பிக்கைகள் மக்களிடையே உண்டு. ஆனால் உண்மையிலேயே கண் துடிப்பது உடலில் இருக்கும் ஒரு சில பிரச்னைகளுக்கான அறிகுறி. அதுமட்டுமல்ல, கண்களின் துடிப்பு நம்முடைய மனநிலையையும் குறிக்கிறது.

கண் துடிப்பது சில நிமிடங்கள் வரை நீடித்து பின் தானாகவே நின்றுவிடும். இது தொடர்பில் பயப்பட தேவையில்லை.ஆனால் இது பல நாட்களாக அல்லது பல மாதங்களாக நீடித்தால் வைத்தியரை அணுகுதல் வேண்டும்.

கண் இமைகள் ஏன் துடிக்கின்றன?

எப்படி மின்சாரத்தில் வோல்டேஜ் குறைந்து உயர்கிறதோ, அதுபோல நரம்புகளுக்கும மின்னணுக்களுக்கும் இடையில் நடக்கும் செயல்பாட்டில் மிக நுண்ணிய மாற்றம் ஏற்படும்போது, கண் இமைகள் துடிக்கின்றன. நாம் கூர்ந்து கவனித்தால், சில சமயங்களில் தொடை, முதுகு, தலை போன்ற இடங்களில்கூட சில தசைகள் துடிப்பதை உணரலாம்.

என்ன காரணம்?

மனநிலையில் ஏற்படும் மாற்றங்கள், அதிக மன அழுத்தம், தூக்கமின்மையால் ஏற்படும் சோர்வு,  முக்கிய சதை மற்றும் தோல் பகுதியில் ஏற்படும் உயிர் வேதி மாற்றங்கள் (Biochemical changes) ஊட்டச்சத்துக் குறைபாடு, தொடர்ந்து கணினி மற்றும் ஸ்மார்ட்போன் என அதிக கதிர்வீச்சுகள்கொண்ட பொருட்களைப் பார்ப்பது, கண்களில் ஈரப்பதம் குறைவது, சிலருக்குக் கண்களில் நீர் வழிவது, எரிச்சல், வீக்கம், அலர்ஜி போன்ற காரணங்களால் கண் இமைகள் துடிக்கக்கூடும்.

சிகிச்சை தேவையா?

இதற்கு எந்த சிகிச்சையும் தேவை இல்லை. இவற்றைக் கட்டுப்படுத்தவும் கூடாது.  ஏனெனில் இது சிகிச்சை செய்யக்கூடிய நோய் அல்ல. கைவைத்தியமோ,  மாத்திரை மருந்துகளை உட்கொள்வதோ கூடாது. ஒரு நாளைக்கு கண் இமைகள்  10 முறை துடித்தால்கூட நார்மல்தான். அதுவே விட்டு விட்டு  25 முறைக்கு மேல் துடித்துக்கொண்டிருந்தால், அதாவது நடைமுறை வாழ்க்கைக்கு இடையூறாக துடித்துக்கொண்டே இருந்தால் என்ன பிரச்னை என மருத்துவரிடம் சென்று ஆலோசனை கேட்கலாம்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

10th Std English One Mark Question Bank