உங்கள் வீட்டில் காற்று மாசு உள்ளதா?.! இனி கவலை வேண்டாம்.!!

இந்த உலகத்தில் உள்ள அனைத்து மக்களும் தினமும் பல்வேறு விதமான பிரச்சனைகளை சந்தித்து வருகிறோம்., அந்த வகையில் தொடர்ந்து காற்று மாசுபாடு என்பது நாம் சமீப காலமாக சந்தித்து வரும் பிரச்சனைகளில் பெரிதான ஒன்றாக உருவெடுத்துள்ளது. அந்த வகையில் காற்று மாசுபாட்டின் காரணமாக இந்தியாவை பொறுத்தவரையில் உச்ச நீதிமன்றம் தீபஒளி பண்டிகையன்று இரண்டு மணிநேரம் மட்டுமே பட்டாசுகளை வெடிப்பதற்கு அனுமதி வழங்கியது.


காற்று மாசுபாட்டிற்கு பட்டாசு மட்டும் தான் காரணம் என்ற நோக்கத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பாகவே இன்று வரை இணையத்தளங்களில் நெட்டிசன்களால் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. இந்த காற்று மாசுபாட்டை குறைப்பதற்கு பல வழிகளை மேற்கொண்டாலும்., கூடுமான அளவிற்கு கட்டுப்படுத்த இயலவில்லை என்பதுதான் கசப்பான உண்மை.
அந்த வகையில் காற்றில் இருக்கும் மாசுபாட்டை குறைப்பதற்காக அமெரிக்காவில் இருக்கும் வாஷிங்க்டன் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் விஞ்ஞானிகள் 'போதோஸ் ஐவி' என்ற புதிய வகையிலான மரபணு மாற்றப்பட்ட தாவரத்தை கண்டறிந்துள்ளனர்.

இதன் மூலம் வீட்டில் வளர்க்கப்படும் இந்த தாவரத்தின் மூலம் வீட்டிற்குள் உருவாகும் நச்சு வாயுக்களை நீக்கி அறையில் உள்ள மாசு காற்றின் அளவை குறைக்கிறது. மேலும் இதன் மூலம் குலோரோபாம், பென்சீன் போன்ற ரசாயன வாயுக்களால் புற்றுநோய், இருதய நோய்கள் உருவாகுவது குறைக்கப்படுகிறது.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

10th Std English One Mark Question Bank