அறிவியல்-அறிவோம்: உயிருக்கு ஆபத்தான உதட்டுச்சாயம்

(S.Harinarayanan. GHSS Thachampet)

உயிருக்கு ஆபத்தான உதட்டுச்சாயம்.


அழகு என்னும் மோகம் ஆண், பெண் இருபாலருக்கும் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஆனால், இன்றைய நவீன உலகில் இரசாயனம் கலந்த அழகுசாதனப் பொருள்களை அதிகமாகப் பயன்படுத்தும் பழக்கம் எங்கும் எதிலும் நிறைந்து காணப்படுகிறது. அவற்றின் ஆபத்துகள் பற்றி ஓரளவுக்குத் தெரிந்திருந்தாலும், அழகுப்படுத்திக்கொள்ளும் ஆர்வத்தில் இருந்து மீள விரும்புவதில்லை. அதில் ஒன்றுதான் பெண்களை பெரிதும் கவரும் உதட்டு சாயம்.இந்த உதட்டு சாயத்தில் கொஞ்சம் கொஞ்சமாக கொல்லும் விஷப் பொருள் இருப்பதை பல்வேறு ஆய்வுகள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றன.

லிப்ஸ்டிக் என்கிற ஒப்பனை வஸ்து என்பது இன்று நேற்று அல்ல. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே உபயோகத்தில் இருந்து வருகிறது. ஆரம்ப நாட்களில் கள்ளிச் செடியின் நிறமி, வண்ணத்துப் பூச்சி, மயில் தோகை , வண்டுகள், மீனின் செதில்கள் , பாம்பின் உடலில் உள்ள நிறமி ஆகியவற்றை உதட்டு சாயத்திற்காக உபயோகப்படுத்தினார்கள் என்று வரலாற்று சான்றுகள் கூறுகின்றன. ஆனால் இவையெல்லாம் திரவ நிலையில் இருந்ததாம். 1912 - ஆம் ஆண்டு முதல்தான் திட நிலையில் உள்ள லிப்ஸ்டிக் குழாய்களில் அல்லது குப்பிகளில் அடைக்கப்பட்டு விற்பனைக்கு வந்தது.


சமீபத்தில், உதட்டு சாயத்தில் கலந்துள்ள இரசாயனங்கள், அதனைப் பயன்படுத்துபவர்களுக்கு ஏற்படும் உடல் பாதிப்புகள் பற்றி ஆய்வு செய்யப்பட்டது. அந்த ஆய்வில் 14 முதல் 19 வயதுக்குட்பட்ட  பெண்கள் இருந்தனர். அவர்கள் தொடர்ந்து பயன்படுத்தி வரும் உதட்டு சாயம், அதன் மேல் உபயோகிக்கும் திரவங்களின் பெயர்கள் பெறப்பட்டன. அவற்றை ஆய்வகத்தில் சோதனை செய்துபார்த்ததில், கார்மியம், குரோமியம், அலுமினியம் கலந்திருப்பது தெரிந்தது. மெக்னீசியம் உள்பட உடலுக்குத் தீங்கு செய்யும் டாக்சின்கள் உருவாவதும் கண்டறியப்பட்டது.

 சராசரியாக நாளொன்றுக்கு இரண்டு அல்லது மூன்று முறை இந்த உதட்டுச் சாயங்களைப் பயன்படுத்துபவர்கள் சுகாதாரத்துக்குக் கேடு விளைவிக்கும் அளவிலான குரோமியத்தைத் தங்களது உடலில் உட்கொள்ளுகிறார்கள் என்றும், இது வயிற்றில் ஏற்படும் கட்டிகளுக்குக்  காரணமாக அமையலாம் என்றும் இந்த ஆய்வு கூறுகிறது.
இதைவிட அதிகம் பயன்படுத்துவர்கள்  இந்த அழகு சாதனப் பொருட்களில் இருக்கும் பிற உலோகப் பொருட்களையும் அளவுக்கு அதிகமாக உட்கொள்ளக்கூடும் என்று அது கூறுகிறது. 

நமது நாட்டிலும் ஏராளமான பெண்கள் உதட்டு சாயத்தை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் இவர்களுக்கும் இதே பாதிப்புகள் ஏற்படும். இதில் ஒட்டும் தன்மைக்காக பாரபின் வேக்ஸ் பயன்படுத்தப்படுகிறது. வண்ணம் மற்றும் மணத்துக்காக குங்குமத்தில் கலக்கும் காட்மியம், துத்தநாகம், சல்பர் எனப் பல்வேறு இரசாயனங்கள் கலக்கப்படுகிறது. உலோக வர்ணம் கிடைக்க லெட் வர்ணப்பூச்சு போடப்படுகிறது. இந்த பாரபின் வேக்ஸ் கொஞ்சம் கொஞ்சமாக வயிற்றுக்குள் செல்லும். நாம் சாப்பிடும் உணவில் இருக்கும் சத்துக்களை உறிஞ்சுவதற்கு ஒருவிதமான வில்லைகள் வயிற்றில் இருக்கும். இந்த பாரபின் வேக்ஸ் வயிற்றில் படிய படிய ஒவ்வொரு விட்டமின் உறிஞ்சிகளும் பாதிக்கப்படும். இதனால், விட்டமின் சம்பந்தமான பாதிப்புகள் ஏற்படும். எலும்புகளில் சத்துக்கள் குறையும்.ஒட்டும் தன்மைக்காக பாரஃபின் மெழுகு சேர்க்கப்படுகிறது. பாரஃபின் மெழுகானது சிறுநீரகம், நரம்பு , எலும்பு சம்பந்தப்பட்ட நோய்களை உண்டாக்கும் அரக்கனாகிறது.உதட்டு சாயத்தில் இருக்கும் குரோமியத்திலிருந்து எழும் வாசனையை முகர்வதாலேயே நுரையீரல் பாதிப்பு வரும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். இந்த ரசாயனங்கள் எச்சில் மூலம் உடலுக்குள்ளும் செல்கின்றன. அதனால் புற்று நோய் உண்டாக வாய்ப்புக்கள் உள்ளன. உதட்டுச் சாயத்தை மிக அடர்த்தியாக பயன்படுத்துவோருக்கு மிக விரைவினில் மார்பக புற்று நோய் உருவாகின்றது என்றும் கண்டுபிடித்திருக்கின்றார்கள்.22 லிப்ஸ்டிக் பிராண்டுகளில் நச்சுப்பொருள் இருப்பதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. 22 லிப்ஸ்டிக் பிராண்டுகளில் 12 நிறுவனங்களின் மாதிரிகளை பரிசோதனை செய்தபோது அதில் காரீயத்தின் (Lead) அளவு அதிகம் இருப்பது தெரியவந்துள்ளது.


சீனாவின் அனைத்து தயாரிப்புகளிலும்  லெட் வர்ணப்பூச்சு இருக்கும்.  தொடர்ந்து குங்குமத்தை நெற்றியில் வைத்துக்கொள்ளும் பலருக்கும் அந்த இடமே கருப்பாக மாறியிருப்பதைக் காணலாம். அதுபோல தொடர்ந்து உதட்டு சாயத்தை பயன்படுத்துவதால் உதடுகள் பாதிக்கப்படும்.தோலில் சிறிய கொப்பளங்கள், அரிப்பு, வெடிப்பு போன்றவையும் உதட்டு சாயத்தின் பயன்பட்டால் உண்டாகின்றன. விரைவிலேயே முதுமைத் தன்மையும் உண்டாக்குதிலும் உதட்டு சாயத்தின் பங்கு இருக்கிறது. எனவே, உதட்டு சாயத்தை தவிர்ப்பது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)