longitude and latitude அடிப்படையில் பள்ளி வளாகத்தில் மட்டுமே ஆன்லைன் வருகைப் பதிவு

நமது பள்ளி அமைவிடம்  longitude and latitude அடிப்படையில், ஏற்கனவே சர்வரில் பதிவு செய்யப்பட்டுள்ளதால், ஆசிரியர்கள் பள்ளி வளாகத்தில் மட்டுமே ஆன்லைன் வருகைப் பதிவு செய்ய வேண்டும்.


 பள்ளிக்கு வெளியே அரை கிலோ மீட்டர் தள்ளியிருந்து ஆன்லைன் வருகைப் பதிவு செய்தால்,Location தவறு என உயர் அலுவலர்களுக்கு காட்டிக் கொடுத்து விடும் என்பதால், இதை தவிர்க்க காலை 9.00 மணிக்கெல்லாம் வருகை புரிந்து, தாமதமாக வரும் மாணவர்களை 9:15 க்குள்பள்ளிக்கு வரச் செய்ய வேண்டும். நமது கல்வித்துறை அமைச்சர், முதன்மைச் செயலர் மற்றும் SPD ஆகியோர் ஆன்லைன் வருகைப் பதிவு செயல் படுத்துவதில் மிகுந்த கவனம் செலுத்துவதால், அதற்கேற்ப சரி செய்து கொள்வது நல்லது.

மிக விரைவில் ஆசிரியர்களுக்கும் ஆன்லைன் வருகைப் பதிவு செயல்படுத்தப் படும்  எனவும் கூறப்படுகிறது. ஆசிரியர்களின் ஆதார் எண் ஏற்கனவே சர்வரில் பதிவு செய்யப்பட்டுள்ளது எனவும் கூறப்படுகிறது.

இனிமேல் ஆசிரியர்கள் காலை 9.00 மணி முதல் மாலை 4.15 வரை, பள்ளியில் இருப்பதை உறுதி செய்யும் வகையிலும், இவற்றை ஆன்லைனில் வட்டாரக் கல்வி அலுவலகம் முதல் கல்விச் செயலர் அலுவலகம் வரை, ஆசிரியர்களை கண்காணிக்கும் வகையிலும் செயலி மேம்படுத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது.உங்கள் பள்ளியின் longitude and latitude பதிவு செய்யப்பட்டு இருப்பதை EMIS இல்  பார்த்து தெரிந்து கொள்ளலாம்

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)