Treasury website இல் salary settlement date எப்படி பார்ப்பது?

நமக்கு ஊதியம் வழங்கும் தேதி மாதத்திற்கு மாதம் மாறுகிறது.இதனால் கடன் தவணைச் செலுத்துவது,குடும்பச் செலவு திட்டமிடுவது போன்ற பல காரியங்கள் ஊதியத் தேதியை நம்பியுள்ளது.ஆகவே அத்தேதியை முன்கூட்டியே எப்படி அறிவது என்பது பலருக்கு தெரிந்திருந்தாலும், ஒரு சிலர் இன்னும் அறியாமல் உள்ளனர்.


கீழ்காணும் linkஐ click செய்து District treasury என்ற பகுதியில் உங்கள் மாவட்டத்தையும்,sub treasury என்ற இடத்தில் உங்களுக்கு ஊதியம் வழங்கும் treasuryஐயும் select செய்து,உங்களின் GPF/CPS NO type செய்து, Code என்ற பகுதியில் EDN  கொடுக்கவும்(சில ஒன்றியங்களில் code மாறலாம்)எந்த மாதம்,எந்த ஆண்டு என select செய்து submit கொடுத்தால் நீங்கள் உங்களின் Net salary,Bill Present Date,Passed Date,Settlement Date முதலியவற்றை காணலாம்.

settlement dateதான் உங்கள் ஊதியம் உங்கள் A/cக்கு வரப்போகும்  தேதி அல்லது வந்த தேதி ஆகும்.அவ்வாறின்றி நீங்கள் Submit கொடுத்தவுடன் No data available என்று வந்தால் இன்னும் bill ready ஆகவில்லை என்று அர்த்தம்.இதன் மூலம் EL சரண்டர்,PF Loan,FA உள்ளிட்ட அனைத்து பணப்பலன்களும் உங்களுக்கு  கிடைக்கும் தேதியை முன்கூட்டியே  அறிந்து பயன்பெறலாம்.link கீழே


Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

10th Std English One Mark Question Bank